குட்டுவன் கண்ணன். (பி-ம்) 3. ‘சொல்லைஇய’; 5. ‘பசுங்கிளை’.
(ப-ரை.) ஐய--, கல் என் கானத்து- கல்லென்னும்ஆரவாரத்தையுடைய காட்டின் கண், கடமா ஆட்டி -கடமாவை நீ அலைப்ப, எல்லும் எல்லின்று - பகற் பொழுதும்மங்கியது; ஞமலியும் இளைத்தன - நாய்களும் நின்னுடன்வேட்டையாடி இளைப்பை அடைந்தன; செல்லல் - போகற்க;ஓங்கு வரை அடுக்கத்து - உயர்ந்த மலைப்பக்கத்தில்,தீதேன் கிழித்த - இனிய தேனிறாலைக்கிழித்த, குவையுடைபசு கழை தின்ற கயம் வாய் - கூட்டமாகிய பசிய மூங்கில்களின்குருத்தைத் தின்ற ஆழ்ந்த வாயையுடைய, பேதை யானை - பேதைமையையுடைய யானை, சுவைத்த கூழை மூங்கில் - தின்றதனாற் கூழையாகிய மூங்கிலையுடைய, குவட்டிடையது - உச்சியின் இடையே உள்ளதாகிய, உது எம்ஊர் - அஃது எமது ஊராகும்.
(முடிபு) ஐய, எல்லும் எல்லின்று; ஞமலியும் இளைத்தன; செல்லல்;குவட்டிடையதுவாகிய; உது எம் ஊர்.
(கருத்து) இரவில் எம்முடைய ஊருக்கு வந்து தங்கிச் செல்வாயாக.
(வி-ரை.) கல்லென்றல்: சிள்வீடு, விலங்கு முதலியவற்றால்உண்டாகும் ஆரவாரம். கடமா - ஒரு வகை விலங்கு. “கடமா தொலைச்சிய கானுறை வேங்கை” (நாலடி. 300.) எல்லின்று: 161, வி-ரை. ஞமலி,தலைவனோடு வந்தவை; தலைவன் நாயொடு வருதலை,
| “முனைபாழ் படுக்குந் துன்னருந் துப்பிற் |
| பகைபுறங் கண்ட பல்வே லிளைஞரின் |