பக்கம் எண் :


342


     களிற்றின நிரை யேந்தல்: “அலகி லானைக ளனேகமு மவற்றொடுமிடைந்த, திலக வாணுதற் பிடிகளுங் குருளையுஞ் செறிந்த, உலவைநீள்வனத் தூதமே யொத்தவவ் வூதத், தலைவ னேயொத்துப் பொலிந்ததுசந்திர சயிலம்’ (கம்ப. வரைக் காட்சி. 7.)

     1-2. பாவடிக் களிறு: “பாவடி யானை” (புறநா. 233:2.)

     3. அறைமடி கரும்பு: (குறுந். 262:7, ஒப்பு.); “அறைக் கரும்பு”(பொருந.193); “அறையுற், றாலைக் கலமருந் தீங்கழைக் கரும்பே”(மலைபடு. 118-9); “அறையுறு கரும்பு” (பதிற். 75:6; பெருங். 1:48:146)

    4. பாலைநிலத்திலுள்ள மூங்கிலின் நிலை: குறுந். 331:1, ஒப்பு.

    5-6. அல்குலவ்வரி: கலி. 60:4; அகநா. 33:16.

    7. வன்பர்: குறுந். 395:3

(180)
  
(தலைவன் பரத்தையிற் பிரிந்த காலத்தில் தலைவியின் ஆற்றாமையைக் கண்ட தோழி அவனது பரத்தைமையை இழிவு தோன்றக்கூறிய போது, “நமக்கு எவ்வளவோ கடமைகள் உள; அவற்றைச்செய்து கொண்டிருத்தல் சாலும்;தலைவனைக் குறை கூறல் வேண்டா’’என்று தலைவி கூறியது.)
 181.   
இதுமற் றெவனோ தோழி துனியிடை  
    
இன்ன ரென்னு மின்னாக் கிளவி  
    
இருமருப் பெருமை யீன்றணிக் காரான்  
    
உழவன் யாத்த குழவியி னகலாது  
5
பாஅற் பைம்பயி ராரு மூரன்  
    
திருமனைப் பலகடம் பூண்ட  
    
பெருமுது பெண்டிரே மாகிய நமக்கே.  

என்பது தலைமகன் பரத்தையிற் பிரிந்தவழி ஆற்றாளாகிய தலைமகள்ஆற்றல் வேண்டித் தோழி இயற்பழித்தவழி, தலைமகள் இயற்படமொழிந்தது.

கிளிமங்கலங் கிழார் (பி-ம். கிள்ளி கிழார்.)

    (பி-ம்) 1. ‘இதுவுமற்’; 5. ‘பாஅற்பெய் பைம்பயிர்’; 7. ‘பெருமுதிர்’,‘பெண்டிராகிய’.

    (ப-ரை.) தோழி-, இரு மருப்பு எருமை ஈன்றணிகாரான் - பெரிய கொம்பையுடைய ஈன்றணிமையையுடையபெண்ணெருமையானது, உழவன் யாத்த குழவியின்அகலாது - உழவனாற் கட்டப்பட்ட கன்றின் பக்கத்தினின்றும்அகலச் செல்லாமல், பாஅல் பை பயிர் - பக்கத்திலுள்ளபசிய பயிர்களை, ஆரும் ஊரன் - மேய்வதற் கிடமாகிய