மதுரை ஈழத்துப் பூதன்றேவன். (பி-ம்) 4. ‘விசும்பு வீசு’, ‘துமியக்’; 5. ‘காலையிற் செலீஇ ’; 7. ‘மடைந்துவக் கும்மே’, ‘மடைந்து சார்குதுமே’.
(ப-ரை.) பாக, இன்றே சென்று - இன்றைக்கே வினையின் பொருட்டுப் புறப்பட்டுப் போய், நாளை வருவது -நாளை மீண்டு வருவேமாக. குன்று இழி அருவியின் - குன்றினின்று வீழும் அருவியைப் போல, வெள் தேர் முடுக -யானைத் தந்தத்தாற் செய்த வெள்ளிய தேர் விரைந்துசெல்ல, இள பிறை அன்ன - இளம்பிறையைப் போன்ற,விளங்கு சுடர் நேமி - விளங்குகின்ற ஒளியையுடையஅத்தேரினது சக்கரம், விசும்பு வீழ் கொள்ளியின் - வானத்தினின்றும், வீழ்கின்ற கொள்ளியைப் போல, பசு பயிர்துமிப்ப-பசிய பயிர்களைத் துணிப்ப, கால் இயல் செலவின் -