பக்கம் எண் :


358


    வெண்டேர்: குறுந். 205:3.

    அருவி வேகத்திற்கு : “கடுவரை நீரிற் கடுத்துவரக் கண்டும்” (பு. வெ. 11.)

    3-4. பயிர் முதலியவை துமியத் தேர் வருதல்: குறுந். 227: 1-3, ஒப்பு.

    5. காலியற் செலவு : “காலுறழ் கடுந்திண்டேர்”, “வளியினிகன்மிகுந் தேரும்” (கலி 33:31, 50:15); “காலென மருள வேறி நூலியற், கண்ணோக் கொழிக்கும் பண்ணமை நெடுந்தேர்”, “துனைகாலன்ன புனைதேர்”, “வான்வழங் கியற்கை வளிபூட் டினையோ” (அகநா. 234: 7-8, 251:7, 384:9); ‘‘காலிய னெடுந்தேர்” (தமிழ்நெறி. மேற்.)

    6. சின்னிரை வளை : “சில்வளை” (பதிற். 40:21, 57:6, 78:3.)

    குறுமகள் : குறுந். 89:7, ஒப்பு.

(189)
  
(பொருளீட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்திருந்த காலத்தில்தனிமையை யாற்றாத தலைவி தோழியை நோக்கி, “நடுயாமத்தில் யான்துயிலின்றிப் படும் துன்பத்தைத் தலைவர் அறிவாரோ?” என்று கூறியது.)
  190.    
நெறியிருங் கதுப்பொடு பெருந்தோ ணீவிச்  
     
செறிவளை நெகிழச் செய்பொருட் ககன்றோர் 
    
அறிவர்கொல் வாழி தோழி பொறிவரி 
    
வெஞ்சின வரவின் பைந்தலை துமிய 
5
உரவுரு முரறு மரையிரு ணடுநாள் 
     
நல்லே றியங்குதோ றியம்பும் 
     
பல்லான் றொழுவத் தொருமணிக் குரலே. 

என்பது பிரிவிடை ஆற்றாளாகிய தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பூதம்புல்லன் (பி-ம். பூதம்புலவன்.)

    (பி-ம்) 5. ‘நரையுரு’, ‘மாவுரு’, ‘வரவரு’; 7. ‘எழுமணிக்’.

    (ப-ரை.) தோழி, நெறி இரு கதுப்பொடு - நெறிப்பைஉடைய கரிய கூந்தலோடு, பெரு தோள் நீவி - பெரியதோள்களைத் தடவி என்னைத் தேற்றி, செறி வளைநெகிழ-இறுகச் செறித்த வளைகள் நெகிழும்படி, செய்பொருட்குஅகன்றோர்-தாம் ஈட்டும் பொருளின் பொருட்டு என்னைப்பிரிந்து சென்ற தலைவர், பொறிவரி வெஞ்சினம் அரவின்-புள்ளிகளையும், பத்திக்கீற்றுக்களையும் மிக்க சினத்தையுமுடைய பாம்புகளின், பசு தலை துமிய - பசிய தலைகள்துணியும்படி, உரம் உரும் உரறும் - வலியையுடைய இடியேறு முழங்குகின்ற, அரை இருள் நடு நாள் -பாதியிரவின்