பக்கம் எண் :


360


(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “தம் பிரிவினால் யான்துன்புறுவேன் என்பதையும், தாம் பிரியுங்காலம் ஏற்றதன்று என்பதையும்கருதாமற் பிரிந்து சென்ற தலைவர் மீண்டு வரிற் புலந்து மறுப்பேன்”என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
 191.   
உதுக்கா ணதுவே யிதுவென் மொழிகோ  
    
நோன்சினை யிருந்த விருந்தோட்டுப் புள்ளினம்  
    
தாம்புணர்ந் தமையிற் பிரிந்தோ ருள்ளா  
    
தீங்குர லகவக் கேட்டு நீங்கிய  
5
ஏதி லாள ரிவண்வரிற் போதிற்  
    
பொம்ம லோதியும் புனையல்  
    
எம்முந் தொடாஅ லென்குவெ மன்னே.  

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை.)

    (பி-ம்) 2. ‘நேர்சினை’; 3. ‘ருள்ளாது’, ‘ருள்ளத்’, ‘என் குவம்’.

    (ப-ரை.) தோழி, இது என் மொழிகு - இதனைஎன்னென்று சொல்வேன்? நோன் சினை இருந்த - வலியமரக்கிளையில் இருந்த, இரு தோடு புள் இனம் - பெரியதொகுதியை உடைய பறவைக் கூட்டங்கள், தாம்புணர்ந்தமையின் - தாம் துணைகளோடு சேர்ந்தமையால்,பிரிந்தோர் உள்ளா - துணைவரைப் பிரிந்தாருடையதுன்பத்தை எண்ணாதனவாய், தீகுரல் அகவ கேட்டும் -இனிய குரலால் அழைப்பக் கேட்ட பின்பும், நீங்கிய -நம்மைப் பிரிந்த, ஏதிலாளர் - அயற்றன்மையை உடையதலைவர், இவண் வரின் - இங்கே மீண்டு வந்தால், போதின்பொம்மல் ஓதியும் புனையல் - மலர்களால் பொங்குதலைஉடைய கூந்தலையும் அலங்கரித்தலை யொழிக, எம்மும்தொடா அல்- எம்மையும் தொடுதலை யொழிக, என்குவெம் - என்று கூறுவம்; அது - அங்ஙனம் செய்தலை,உது காண் - உவ்விடத்துப் பார்ப்பாயாக.

    (முடிபு) இதுவென் மொழிகு? கேட்டும் நீங்கிய ஏதிலாளர்வரின்,‘‘ஓதியும் புனையல், தொடாஅல்” என்குவம்; அது உதுக்காண்.

    (கருத்து) நம்மைப் பிரிந்த தலைவர் வரின், அவரை ஏற்றுக்கொள்ளேன்.

    (வி-ரை.) உதுக்காண் :இத்தொடரின் இலக்கண முடிபை இந்நூல்81-ஆம் செய்யுள் விசேட வுரையிற் காண்க. புள்ளினம் அகவுதலை,