கருதி, “இது பொருளற்ற கூற்று; அவர் வரின் இவள் ஊடல் தானேநீங்கும்” எனத் தோழி எண்ணுதல் கூடுமென்னும் நினைவினளாதலின்ஆக்கப் பொருள் தரும் மன்னைக் கூட்டி, ‘என்குவெம் மன்னே’ என்றாள். ஏ : ஈற்றசை. ஓதியும் : உம், எதிரது தழீஇயது; எம்மும் : உம் இறந்தது தழீஇயது.
(மேற்கோளாட்சி)மு. தலைவன் பிரிந்த வழித் தலைவி காய்ந்து கூறியது(தொல். கற்பு. 6, ந.); ஊடலென்னும் உரிப்பொருள் வந்தது (நம்பி. 251.)
ஒப்புமைப் பகுதி 1. உதுக் காண் : குறுந். 81:4, ஒப்பு.; ஐங். 101, 453;கலி. 108:39; புறநா. 307:3.
2. தோட்டுப் புள்ளினம் : குறுந். 34:4-5, வி-ரை.
2-4. புணர்ந்த பறவையின் ஒலி பிரிந்தாருக்குத் துன்பத்தைஉண்டாக்குதல் : (குறுந்.160:1-4); “அழுந்துபடு விழுப்புண் வழும்புவாய்புலரா, எவ்வ நெஞ்சத் தெஃகெறிந் தாங்குப், பிரிவில புலம்பி நுவலுங்குயிலினும்”, “புணர்குயில் விளித்தொறு, நம் வயினினையு நெஞ்சமொடுகைம்மிகக், கேட்டொறுங் கலுழுமால்”, “செங்கணிருங்குயி லெதிர்குரல்பயிற்றும், இன்ப வேனிலும் வந்தன்று” (நற். 97:1-3, 157:5-7, 224:5-6.)
பறவைகள் புணர்ந்து அகவுங் காலத்தில் தலைவர் பிரிதல் :“அடைகரை மாஅத் தல்குசினை பொலியத், தளிர்கவி னெய்திய தண்ணறும் பொதும்பிற், சேவலொடு கெழீஇய செங்க ணிருங்குயில், புகன்றெதி ராலும் பூமலி காலையும், அகன்றோர் மன்றநம் மறந்திசினோர்”, “பூங்கணிருங் குயில் ... ... அகற லோம்புமி னறிவுடை யீரெனக், கையறத் துறப்போர்க் கழறுவ போல, மெய்யுற விருந்து மேவர நுவல, இன்னா தாகிய காலைப் பொருள்வயிற், பிரித லாடவர்க் கியல்பெனின்” (நற். 118:1-5, 243:4-10; “விரிகாஞ்சித் தாதாடி யிருங்குயில் விளிப்பவும், பிரிவஞ்சா தவர் தீமை” (கலி. 34:8-9.)
தலைவனை ஏதிலனென்றல்: “ஏதி லாளர்க்குப் பசந்தவென்கண்ணே”, “ஏதிலாளனை” (ஐங். 34:4, 232:2.)
6. பொம்ம லோதி : குறுந். 379:6; நற்.252:12; அகநா. 214:9,221:3, 311:7, 353:23; பெருங். 1.55:119; சீவக. 1674, 2364.
தலைவன் தலைவியின் ஓதியைப் புனைதல் : குறுந். 82:1, 192:6.
7. எம்மும் தொடாஅல்: “தொடல்விடு நற்கலையே” (திருச்சிற். 358)
(191)
(தலைவன் பிரிந்திருந்த காலத்தில், “அவர் வருவர்; நீ வருந்தற்க”என்று தோழி கூறி ஆற்றுவிப்பத் தலைவி, “இளவேனிற் பருவத்தும்அவர் வாராமையின் தனித்திருக்கும் யான் எங்ஙனம் வருந்தாமல்இருப்பேன்;” என்று இரங்கிக் கூறியது.)