பக்கம் எண் :


365


    3-4. பொன்னின் உரைதிகழ் கட்டளை : “பொன்காண் கட்டளை”(பெரும்பாண்:220); “தாதுகப் பொன்னுரை கட்டளை கடுப்ப”(அகநா. 178:10-11.)

    3-5. குயில் மாவின் தாதைக் கொழுதுல் : “மாநனை கொழுதிமகிழ்குயி லாலும்” (நற்.9:10); “மாநனை கொழுதிய மணிநிற விருங்குயில்”(அகநா.25:6.)

    6. குரற் கூந்தல் : கலி. 72:20, 93:22.

    3-6. குயில் மாவிலிருந்து மகிழும் காலத்திலும் தலைவன்பிரிந்திருத்தலால் தலைவி வருந்துதல்: நற். 118:1-5, 157:4-6; அகநா.229:18-21.

(192)
  
(தலைவனும் தலைவியும் இல்லறம் நடத்தும் மனைக்குச் சென்றதோழி,”நீ வரையு நாளளவும் நின் நலம் தொலையாமல் ஆற்றி யிருந்தாய்” என்று பாராட்ட அது கேட்ட தலைவி, “அஃது என் வலியன்று; தலைவன் செய்த தண்ணளியே அத்தகைய நிலையைத்தந்தது” என்றது.)
 193.   
மட்டம் பெய்த மணிக்கலத் தன்ன 
    
இட்டுவாய்ச் சுனைய பகுவாய்த் தேரை 
    
தட்டைப் பறையிற் கறங்கு நாடன் 
    
தொல்லைத் திங்க ணெடுவெண் ணிலவின் 
5
மணந்தனன் மன்னெடுந் தோளே 
    
இன்று முல்லை முகைநா றும்மே. 

என்பது தோழி கடிநகர் புக்கு, “நலந்தொலையாமே நன்கு ஆற்றினாய்”என்றாட்குக் கிழத்தி உரைத்தது.

அரிசில் கிழார் (பி-ம். அரிசிற் கிழார், அழிசிற் கிழார்.)

    (பி-ம்.) 2. ‘இட்டுவர்ச்சுனையபகுவாய்த் தட்டைப்’; 5. ‘மன்னனெந்’,‘மன்னெந்’.

    (ப-ரை.) தோழி, மட்டம் பெய்த - கள்ளைப் பெய்த,மணி கலத்து அன்ன - நீலக்குப்பிகளைப் போன்ற, இட்டுவாய் சுனைய - சிறிய வாயையுடைய சுனையின்கண்உள்ளனவாகிய, பகு வாய் தேரை - பிளந்த வாயையுடையதேரைகள், தட்டை பறையின் கறங்கும் நாடன் - கிளிகடிகருவியாகிய தட்டைப் பறையைப் போல ஒலிக்கும்நாட்டையுடைய தலைவன், தொல்லை திங்கள் நெடு வெள்நிலவின் - களவுக் காலமாகிய பழைய திங்களில் நெடியவெண்ணிலாவின்கண், நெடு தோள் - என் நீண்ட தோள்களை,மணந்தனன்- தழுவினான்; அதனால், இன்றும் - இக்காலத்தும், முல்லை முகை நாறும் - அவன் மேனியினது