பக்கம் எண் :


367


    தொல்லைத் திங்களென்றது அவன் நெடுங்காலத்துக்கு முன் மணந்தனனேனும் அவனன்பு இன்றளவும் அறாது நின்று காத்ததென்பதைவெளியிட்டவாறு. முல்லை முகைநாறு மென்றாள் அந்நறு மணத்தைமோந்து ஆற்றினேனென்பது கருதி.

    நாறும்மே: விரிக்கும் வழி விரித்தது. ஏகாரங்கள் அசை நிலைகள்.

    (மேற்கோளாட்சி) மு. தலைமகள் தலைவன் பிரிவின்கண் வருந்தாதிருந்தற்குக்காரணம் கூறியது (நம்பி. 203.)

    ஒப்புமைப் பகுதி 2. சுனையின் குறுகிய வாய்: “நுங்கின், தடிகண் புரையுங்குறுஞ்சுனை” (கலி.108: 40-41.)

    பகுவாய்த் தேரை : அகநா.154:2.

    1-2. சுனையின் குறுமை : குறுந். 12:1.

    3. தட்டை : குறுந். 223:4; மலைபடு.9, 328; பெருங்.2.12: 120.

    2-3. தேரையின் ஒலிக்குத் தட்டையின் ஒலி : “அரிக்குரற்றட்டை” (மலைபடு. 9.)

    தேரை கறங்குதல் : அகநா. 364:3.

    4. திங்கள் நிலவு :“அற்றைத் திங்க ளவ்வெண்ணிலவின்.. இற்றைத்திங்க ளிவ்வெண் ணிலவின்” (புறநா. 112:1-3.)

    நெடு வெண்ணிலவு : குறுந். 47:4,ஒப்பு.

    நெடுந்தோள் : குறுந். 268:6.

    தலைவன் தலைவியின் தோளை மணத்தல் : குறுந். 36:4, 50:5,100:7, 272: 1-8.

    6. தலைவன் மேனி நறுமணம் உடையதாதல் : “ஊரனறுமேனி,கூட லினிதா மெனக்கு” (ஐந். ஐம்.30.)

(193)
  
(தலைவன் கூறிச் சென்ற கார்ப்பருவம் வந்ததை மேகத்தின்ஒலியாலும் மயிலின் மகிழ்ச்சியாலும் அறிந்த தலைவி தோழிக்குத் தன்ஆற்றாமைக் காரணத்தை அறிவித்தது.)
x
 194.    
என்னெனப் படுங்கொ றோழி மின்னுபு 
    
வானேர் பிரங்கு மொன்றோ வதனெதிர் 
    
கான மஞ்ஞை கடிய வேங்கும் 
    
ஏதில கலந்த விரண்டற்கென் 
5
பேதை நெஞ்சம் பெருமலக் குறுமே. 

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளெனக் (பி-ம். ஆற்றாளாமெனக்)கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கோவதத்தன் (பி-ம். கோவத்தன்.)

    (பி-ம்) 2. ‘வலனேர்’; 1-2. ‘மின்னுவானேயிரங்கு’, ‘மின்னுவரலேயிரங்கு’; 4. ‘விரண்டற்கே’.