பக்கம் எண் :


369


(தலைவன் கூறிச்சென்ற பருவ வரவின்கண், “எனக்குத் துன்பத்தைத் தரும் இம்மாலைக் காலத்தில் தாம் மேற்கொண்ட வினையை முடிக்கச் சென்றவர் எனது நிலையை உணராராயினர். அவர் யாண்டுள்ளாரோ!” என்று தலைவி கூறி வருந்தியது.)
 195.   
சுடர்சினந் தணிந்து குன்றஞ் சேரப்  
    
படர்சுமந் தெழுதரு பையுண் மாலை  
    
யாண்டுளர் கொல்லோ வேண்டுவினை முடிநர்  
    
இன்னா திரங்கு மென்னா ரன்னோ  
5
தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச்  
    
செய்வுறு பாவை யன்னவென்  
    
மெய்பிறி தாகுத லறியா தோரே.  

என்பது பிரிவிடைப் பருவவரவின்கட் கிழத்தி மெலிந்து கூறியது.

தேரதரன (பி-ம். தோதான், தாமோதரன்.)

    (பி-ம்) 2. ‘தெழுதகு’, ‘தெழுதரும்’; 5. ‘தைஇயசைவளி’, ‘தைவசைவளி’, ‘மெய்பாயந்தூதா’, ‘மெய்பாய்ந்தூர்தர’; 6. ‘செய்புறு’, ‘செய்யறு’.

    (ப-ரை.) தோழி -, தைவரல் அசை வளி - தடவுதலையுடைய அசைந்து வரும் காற்று, மெய் பாய்ந்துஉறுதர - உடம்பின் கண் பரந்து தீண்ட, அதனால், செய்வுஉறு பாவை அன்ன - அலங்காரம் செய்தலைப் பெற்றபாவையைப் போன்ற, என் மெய் - எனது மேனி, பிறிதுஆகுதல் அறியாதோர் - வேறுபாடுடையதாகுதலை அறியாதவராகிய தலைவர், வேண்டு வினை முடிநர் - தாம் விரும்பிச்சென்ற கருமத்தை முடித்துக் கொள்வாராய், சுடர் சினம்தணிந்து - கதிரவன் வெம்மை நீங்கி, குன்றம் சேர - அத்தகிரியை அடைய, படர் சுமந்து- நினைவு கூரும் துன்பத்தைமேற்கொண்டு, எழுதரு பையுள் மாலை - வாரா நிற்கும்துன்பத்தைத் தரும் மாலைக் காலத்தில், யாண்டு உளர்கொல் -எங்கே இருக்கின்றனரோ? அன்னோ - அந்தோ! இன்னாது -இம்மாலைக் காலம் துன்பத்தைத் தருவது, இரங்கும்-தலைவி வருந்துவாள், என்னார் - என்று நினையாராயினர்.

    (முடிபு) என் மெய் பிறிதாகுதலை அறியாதோர், வேண்டுவினைமுடிநர் யாண்டுளர் கொல்? இரங்கு மென்னார்.

    (கருத்து) என்னுடைய மெலிவையறிந்து தலைவர் இன்னும்மீண்டாரல்லர்.

    (வி-ரை.) சினம்- வெயிலுமாம். சினந்தணிந்தமையைக் கூறினமையின் குன்றம் அத்தகிரியாயிற்று. படர்- தமியராயினார் படும் துன்பம்.