பக்கம் எண் :


46


இணைமுரணும் கடையிணை எதுகையும் வந்தன வாயினும், யாதானு மொன்றினாற் பெயர்கொடுத்து இணைமுர ணென்றானும், கடையிணை எதுகை யென்றானும் வழங்கப்படும்; ஏனையடி ஒரூஉத் தொடையாகியவரனடையில்லாமையால் அதனை மயக்கம் எனினும் இழுக்காது’ (யா.வி. 53); எல்லா அடியும் ஒத்துச் சிறப்புடை நேர்த்தளையான் வந்த நிலைமண்டில ஆசிரியப்பா (யா.வி. 74)

     ஒப்புமைப் பகுதி 1. வேரல்வேலி: “முந்தூழ் வேலிய மலைகிழ வோற்கே” (குறுந். 236:6); “வேரல் வேலி மால்வரைக் கவான்” (சூளா. சீயவதை. 227) வேர்கோட் பலா : “வேரு முதலுங் கோடு மொராங்குத், தொடுத்த போலத் தூங்குபு தொடரிக், கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின், ஆர்கலி வெற்பன்” (குறுந். 257: 1-4); “செவ்வேர்ச், சினைதொறுந் தூங்கும் பயங்கெழு பலவின்” (நற். 77: 4-5); “ செவ்வேர்ப் பலவின் பயங்கெழு கொல்லி” (அகநா. 209:15.) வேரல் வேலிப் பலவு : “ யானை ... வேரல் வேலிச் சிறுகுடி யலறச், செங்காற் பலவின் றீம்பழ மிசையும், மாமலை நாட” (நற். 232: 1-6.) 5. காமம் பெரிது; (குறுந். 102:3, 371:4); “காதறானுங் கடலினும் பெரிதே”, “காமம் பெரிதே களைஞரோ விலரே” (நற். 166: 10, 335:11.) காமமும் உயிரும்; (குறுந். 290); “ பெரிதே காமமென் னுயிர்தவச் சிறிதே” (கலித். 137:2.)

(18)
  
(தலைவி ஊடிய போது அவ்வூடலைத் தான் தெளியச் செய்யவும் தெளியாளாகிப் பின்னும் ஊடிய காலத்தில் தலைவன், “இவள் தன் பழைய தன்மை மாறி நம்மோடு உறவில்லாள் போல் இருக்கின்றாள்” என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.)
 19.    
எவ்வி யிழந்த வறுமையாழ்ப் பாணர்  
    
பூவில் வறுந்தலை போலப் புல்லென்  
    
றினைமதி வாழிய நெஞ்சே மனைமரத்  
    
தெல்லுறு மௌவ னாறும்  
5
பல்லிருங் கூந்தல் யாரளோ நமக்கே. 

என்பது உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.

     (உணர்ப்பு - ஊடலைத் தெளியச் செய்தல்.)

பரணர்.

    (பி - ம்.) 1. ‘வறுமையர்பாணர்’; 3. ‘வாழியோ’; 5. ‘யாருளர் நமக்கே’, ‘யாரே நினக்கே’.

     (ப-ரை.) நெஞ்சே-, மனை மரத்து - மனைப் படப் பையில் உள்ள மரத்தின்மீது படர்ந்த, எல் உறு மௌவல் - ஒளியை உடைய முல்லை மலர்கள், நாறும் - மணம் வீசுதற்கிடமாகிய, பல் இரு கூந்தல் - பலவாகிய கரிய கூந்தலை