மேற்கோளாட்சி1. அகத்திணையில் புறத்திணைக் கருப்பொருள் உவமமாக வந்தது (தொல். அகத். 55,ந. ) 2-3. நெஞ்சை உணர்வு உடையதுபோல வெகுளி பற்றிக் கூறியது (தொல். பொருளியல், 2, ந.)மு. உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைவன் புலத்தல் (தொல். கற்பு. 15, இளம், ந.); துன்பத்துப் புலம்பலென்னும் மெய்ப்பாடு தலைவனுக்கும் உரியது (தொல்.மெய்ப் .22,பேர்; இ.வி. 580); ‘தலைவி தான் உணர்த்தவும் உணராமல் தன்னைக் கைவிட்டுப் பிரியின், தான் அவளை நீங்குதற்கு அஞ்சிய அச்சத்தின் கண்ணும் தலைவற்குக் கூற்று நிகழும்; அஃது உணர்ப்புவயின் வாரா ஊடலாம்’(தொல். கற்பு.5, ந.); தலைமகன் புலவி தணியாளாகத் தலைமகன் ஊடல் (நம்பி.206.)
ஒப்புமைப் பகுதி 1. எவ்வி: புறநா. 233:6, அடிக். 2. புல்லென்றல். குறுந். 41:5, 277:2,310:4; கலித் . 3,4 1-2 பாணர் பொற்பூச் சூடுதல்: (பொருந. 159 - 60, அடிக்); “பூப்புனையும், நற்குலத்துட் டோன்றிய நல்லிசையாழ்த் தொல்புலவீர்” (பு.வெ. 31). 3, வாழிய நெஞ்சே; குறுந். 199:2, இனைமதி வாழிய நெஞ்சே: “உடைமதி வாழிய நெஞ்சே” (அகநா. 123:8); பட். 230. மனைமரம்: “மனைமரத்தான்” (மதுரைக். 268); “மனைமர மொசிய வொற்றி” (அகநா. 58:13.)
4. எல்லுறு மௌவல்: “அரும்பவிழ் முல்லை, நிகர்மலர்” (சிலப்.9;1-2) 3-4. மனைமரத்தில் உள்ள மௌவல்: “மயிலடி யிலைய மாக்குர னொச்சி, மனைநடு மௌவலொ டூழ்முகை யவிழ” (நற். 115:-5-6); “மனையிள நொச்சி மௌவன் வான்முகை”, “மனைய, தாழ்வி னொச்சி சூழ்வன மலரும், மௌவன் மாச்சினை” (அகநா. 21:1, 23:10-12);“இல்வளர் முல்லையொடு மல்லிகை”, “மனைவளர் முல்லை” (சிலப் 4:27, 13:120); “இல்லெழு முல்லையொடு மல்லிகை மயங்கி”, “மனைப்பூங் காவின் மருங்கிற் கவினிய, பைந்தார் முல்லை வெண்போது நெகிழ” (பெருங்.1.33:73,3.7: 13-4) 5. பல்லிருங் கூந்தல்: நெடுநல். 54; ஐங். 308:1, 429:1; கலி. 101:41-2; அகநா. 43:11; மணி.22:130; சீவக. 164, 989.
(19)
(தலைவனது பிரிவை உணர்த்திய தோழியை நோக்கி, என்பாலுள்ள அருளையும் அன்பையும் நீக்கிப் பிரிவது அறிவுடையோருக்கு ழகன்று” என்று தலைவி உணர்த்தியது.) 20. | அருளு மன்பு நீக்கித் துணைதுறந்து |
| பொருள்வயிற் பிரிவோ ருரவோ ராயின் |
| உரவோ ருரவோ ராக |
| மடவ மாக மடந்தை நாமே. |
என்பது செலவுணர்த்திய தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
(செலவு - தலைவன் பொருள்வயிற் பிரிதலை.)