பக்கம் எண் :


372


     மேற்கோளாட்சி 1-2. ஏனது சுவைப்பினும் நீகை தொட்டது வானோரமுதம் புரையுமா லெமக்கென அடிசிலும் பூவுந் தொடுதற்கண் தலைவன்கூறிய கூற்றினைத் தோழி கொண்டு கூறியது (தொல். கற்பு. 5, இளம்,ந.)

    மு. தாம் எளியராகிய கற்புக் காலத்திலே, களவுக் காலத்துத் தமதுபெருமையை உணர்த்திய வருத்தத்தின் கண் தோழி கூறியது. (தொல்.கற்பு.9, இளம், ந.); பாங்கி அன்பிலை கொடியை யென்று இணர்த்தார்மார்பனை இகழ்ந்தது (நம்பி. 206; இ.வி. 555.)

     ஒப்புமைப் பகுதி 2. கட்டி: (பெருங். 2. 4:93); “சாறட்ட கட்டியே”(யா.வி. 62, மேற்: ‘வையகமெல்லாம்’.)

    3. பாரி பறம்பு : சிறுபாண். 91; அகநா. 303:10; புறநா. 108:4-5, 109:1, 110:2, 113:7, 118:5, 158:4.

    பாரி பறம்பிற் சுனை: “அளிதோ தானே பாரியது பறம்பே..மீன்க ணற்றதன் சுனையே” (புறநா. 109:1-10.)

    3.மு. புறநா.176:9, 337:6.

    4. தைத்திங்கள் நீர் தண்ணிது : “தைஇத் திங்கட் டண்கயம்”(நற். 80:7); “தைஇத் தண்கயம்” (ஐங். 84:4); “தைஇத் திங்கட் டண்கயம்போல” (புறநா. 70:6.)

 மு. 
“தீம்பால் கமழு மணிவாய்ப் புதல்வற்குச் சிற்றெலும்பு 
  
 பூம்பாவை யாக வருள்வோன்றென் வெங்கைப்பொருப்பிலிளங் 
  
 காம்பான தோளிமுன் வேம்புதந் தாலுங் கழைக்கரும்பாம் 
  
 வேம்பா முனக்குக் கரும்பா யினுமின்று வேலவனே” 
  
                                (வெங்கைக் கோவை. 403.)  
(196)
  
(பருவ வரவின்கண், “தலைவர் வருவர்; நீ வருந்தற்க” எனத்துணிபு கூறிய தோழியை நோக்கி, ‘‘என் உயிரைக் கொள்ள வருவது போல இக்கூதிர்ப் பருவம் வந்தது; இனி என் செய்வேன்?” என்று தலைவி கூறியது.)
 197.   
யாதுசெய் வாங்கொ றோழி நோதக 
    
நீரெதிர் கருவிய காரெதிர் கிளைமழை 
    
ஊதையங் குளிரொடு பேதுற்று மயங்கிய 
    
கூதி ருருவிற் கூற்றம் 
5
காதலர்ப் பிரிந்த வெற்குறித்து வருமே. 

என்பது பருவ வரவின்கண் வற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கச்சிப்பேட்டு நன்னாகையார்.

    (ப-ரை.) தோழி-, நோதக - நோதல் பொருந்தும்படி,நீர் எதிர் கருவிய - நீரை ஏற்றுக் கொண்ட மின் முதலியதொகுதியை யுடையனவாகிய, கார் எதிர் கிளை மழை -