பக்கம் எண் :


382


    சிறியிலை: புறநா. 109:4, 308:4.

    4-5. இனிய செய்த தலைவர் பின் இன்னாசெய்தல்: “இனியசெய்தகன்றுநீ யின்னாதாத் துறத்தலின்” (கலி. 53:12.)

(202)
  
(பரத்தையிற் பிரிந்த தலைவனுக்குத் தூதாகப் புக்க தோழியைநோக்கி, “தலைவர் உடனுறைந்து அன்பு பாராட்டற்குரிய நிலையினராகஇருந்தும் அயன்மை தோன்ற ஒழுகுகின்றார்; அவர்பால் முன்புபரிவுடையேன்; இப்பொழுது அது நீங்கியது” என்று தலைவி மறுத்துக்கூறியது.)
 203.    
மலையிடை யிட்ட நாட்டரு மல்லர் 
    
மரந்தலை தோன்றா வூரரு மல்லர் 
    
கண்ணிற் காண நண்ணுவழி யிருந்தும் 
    
கடவு ணண்ணிய பாலோர் போல 
5
ஒரீஇ யொழுகு மென்னைக்குப் 
    
பரியலென் மன்யான் பண்டொரு காலே. 

என்பது வாயிலாகப் புக்க தோழிக்குத் தலைமகள் சொல்லியது.

நெடும்பல்லியத்தன் (பி-ம். நெடும்பல்லியத்தை.)

    (பி-ம்.) 3. ‘யிருந்து’; 4. ‘கடவுணணிய’; 5. ‘வெரீஇயினொழுகு’, ‘ஒரீஇயின னொழுகு’, ‘வெரீஇயின னொழுகு’; 6. ‘பரியலெமன்’, ‘யாம்’.

    (ப-ரை.) தோழி, மலை இடை இட்ட நாட்டரும் அல்லர் -தலைவர் மலைகள் இடையிடுவதனாற் சேயதாகிய நாட்டினருமல்லர்; மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர் - தன்னிடத்துள்ளமரங்கள் நமக்குத் தோன்றாத சேய்மையிலுள்ள ஊரினரும்அல்லர்; கண்ணின் காண - கண்ணாலே காணும்படி, நண்ணுவழி இருந்தும் - விரைவில் வருதற்குரிய அணிமையிடத்திலிருந்தும், கடவுள் நண்ணிய பாலோர் போல - முனிவரைஅணுகி வாழும் பகுதியினரைப்போல, ஒரீஇ ஒழுகும்என்னைக்கு - மனத்தால் நீங்கி ஒழுகுகின்ற என் தலைவர்பொருட்டு, யான்--, பண்டு ஒருகால்-முன்பு ஒரு சமயத்தில்,பரியலென் - பரிதலையுடை யேனாயினேன்; மன்-அஃதுஇப்பொழுது கழிந்ததே!

    (முடிபு) நாட்டரு மல்லர்; ஊரரும் அல்லர்; நண்ணுவழியிருந்தும்ஒரீஇயொழுகும் என்னைக்குப் பண்டொருகால் யான் பரியலென்மன்.

    (கருத்து)இப்பொழுது என்னைப் புறக்கணித் தொழுகும்தலைவர்பால் யான் முன்பு பரிவுடையளாக இருந்தேன்.

    (வி-ரை.) மலையிடை யிட்ட நாட்டரென்றது வேற்று நாட்டாரென்றபடி; மரந்தலை தோன்றா ஊரரென்றது காடிடையிட்ட வேற்றூரா