பக்கம் எண் :


384


(வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாளெனவருந்திய தோழியை நோக்கி, “தலைவர் பிரிந்தவுடன் என் நுதலிற்பசலை தானே பரந்தது” என்று தலைவி கூறியது.)
 205.    
மின்னுச்செய் கருவிய பெயன்மழை தூங்க 
    
விசும்பா டன்னம் பறைநிவந் தாங்குப் 
    
பொலம்படைப் பொலிந்த வெண்டே ரேறிக் 
    
கலங்குகடற் றுவலை யாழி நனைப்ப 
5    
இனிச்சென் றனனே யிடுமணற் சேர்ப்பன் 
    
யாங்கறிந் தன்றுகொ றோழியென் 
    
தேங்கமழ் திருநுத லூர்தரும் பசப்பே.  

என்பது வரைவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

உலோச்சன்.

    (பி-ம்.) 1. ‘கருவிப்பெயன் மழை’; 3. ‘வொண்டேரேறிக்’; 4. ‘றிவலை’.

    (ப-ரை.) தோழி-, இடு மணல் சேர்ப்பன் - அலைகள்கொண்டு வந்திட்ட மணலையுடைய கடற்கரையையுடைய தலைவன், மின்னு செய் கருவிய - மின்னலைச் செய்கின்றதொகுதியையுடையனவாகிய, பெயல் மழை தூங்க - பெய்தலையுடைய மேகம் பெய்யாநிற்ப, விசும்பு ஆடு அன்னம் - வானத்தில் அசையும் அன்னப் பறவை, பறை நிவந்தாங்கு - பறத்தலில் உயர்ந்ததைப்போல, பொலம்படை பொலிந்த - பொற்படைகளாற் பொலிவு பெற்ற, வெள் தேர் ஏறி -யானைமருப்பாற் செய்த வெள்ளிய தேரின்கண் ஏறி, கலங்கு கடல் துவலை - கலங்கிய கடலிலுள்ள அலையின் நீர்த்துளிகள், ஆழி நனைப்ப - அத்தேரின் சக்கரங்களை நனைக்க,இனி சென்றனன் - இப்பொழுது என்னைப் பிரிந்து சென்றான்; பசப்பு - பசலையானது, யாங்கு அறிந்தன்று - இதனை எப்படி அறிந்தது? என் தேம் கமழ் திருநுதல் ஊர்தரும் - எனது மணம் கமழ்கின்ற அழகிய நெற்றியிடத்துஅது பரவா நிற்கின்றது.

    (முடிபு) தோழி, சேர்ப்பன் ஏறி நனைப்பச் சென்றனன்; பசப்புயாங்கறிந்தன்று கொல்? நுதலில் ஊர்தரும்.

    (கருத்து) தலைவன் பிரிவினால் யான் பசலை நோயுற்றேன்.

    (வி-ரை.) பறை-பறத்தல்; சிறகுமாம். படை-தட்டு; பக்கத்திலமைத்தபலகைகளுமாம்; “இழையணி நெடுந்தேர்” (புறநா. 123:4) என்பதற்கு,