பக்கம் எண் :


388


அரும்படர் - பிறமருந்தால் தீர்த்தற்கரிய துன்பம்;

       
“பிணிக்கு மருந்து பிறம னணியிழை 
  
 தன்னோய்க்குத் தானே மருந்து”             (குறள், 1102.)

 

    அரிதே:ஏகாரம் தேற்றம். பாங்கனைப் பன்மையாற் கூறினான்;பார்ப்பனப்பாங்கனைப் பன்மையாற் கூறுவது மரபென்று தெரிகின்றது(இறை. 3, உரை.)

    ‘நான் அறிவின்மையால் இந்நோய் தலைக் கொண்டேன். இதனால்விளைந்த துன்பம் தீர்த்தற்கரிதாயிற்று. அறிவுடையீராகிய நீர் செல்லுதலைஒழிமின்’ என்றான். இதனால் தலைவன் தன் நிலைமையை ஒருவாறுபுலப்படுத்தினானாயிற்று.

    ஒப்புமைப் பகுதி 3. இன்னா அரும்படர்:நெடுநல். 167.

    5. குறுக லோம்புமின்: குறுந். 184:2.

(206)
  
(தலைவர் சொல்லாமற் பிரிந்து செல்வதைத் தோழி கூறிய பொழுது,“இங்ஙனம் சொல்லிய ஆர்வலர் பலர்; அவரைப் போல நீயும் சொன்னாய்; தலைவரைத் தடுத்தாயல்லை” எனத் தலைவி இரங்கிச் சொல்லியது.)
 207.    
செப்பினஞ் செலினே செலவரி தாகுமென் 
    
றத்த வோமை யங்கவட் டிருந்த 
    
இனந்தீர் பருந்தின் புலம்புகொ டெள்விளி 
    
சுரஞ்சென் மாக்கட் குயவுத்துணை யாகும் 
5
கல்வரை யயலது தொல்வழங்கு சிறுநெறி 
    
நல்லடி பொறிப்பத் தாஅய்ச் 
    
சென்றெனக் கேட்டநம் மார்வலர் பலரே. 

என்பது செலவுக் குறிப்பறிந்து, அவர் செல்வார் (பி-ம். செல்லார்,சொல்லார்) என்று தோழி சொல்லக் கிழத்தி உரைத்தது.

     (செலவுக் குறிப்பு - ஆயுதங்களைத் துடைத்தல் முதலியன; கலி. 7;நற். 177.)

உறையன்.

     (பி-ம்.) 1. ‘செப்பினெஞ்’, ‘செப்பிநாம்’, ‘சொலினே’; 3. ‘புலம்புகொண்டவ்விளி’; 5. ‘கல்வரைபலாது’, ‘தோல்வழங்கு’, ‘தேர்வழங்கு’,‘பேஎர்பட்ட தொல் வழங்கு’.

    (ப-ரை.) செப்பினம் செலின் - நம்முடைய செலவைத்தலைவியினிடத்துச் சொல்லிச் செல்வேமாயின், செலவு அரிதுஆகும் - செல்லுதல் அரிதாகும், என்று - என்று கூறி,அத்தம்ஓமை - பாலைநிலத்திலுள்ள ஓமைமரத்தினது, அம்கவட்டு இருந்த - அழகிய கிளையின்கண் இருந்த, இனம்தீர் பருந்தின் - இனத்தினின்றும் பிரிந்து வந்த பருந்தினது,புலம்பு கொள் தெள்விளி - தனிமையைப் புலப்படுத்தலைக்