பக்கம் எண் :

<


390


    2-3. ஓமைக்கவட்டிற் பருந்து இருத்தல்: “பருந்திளைப் படூஉம் பாறுதலை யோமை”, “கருங்கா லோமை யேறி வெண்டலைப், பருந்து பெடை பயிரும்” (அகநா. 21;15, 117:6-7.)

    ஓமையிலிருந்து பருந்து விளித்தல்: “உலறுதலைப் பருந்தினுளிவாய்ப் பேடை, அலறுதலை யோமை யங்கவட் டேறிப், புலம்புகொள விளிக்கு நிலங்காய் கானத்து’’ (ஐங். 321:1-3.)

    4. உயவுத்துணை: ஐங். 477:3; அகநா. 103:12, 298:22, 338:11, 343:14.

    3-4. பருந்தின் விளி உயவுத்துணையாதல்: “பருந்திருந்து யாவிளி பயிற்றும்”(அகநா.19:2-3.)

    5. (பி-ம்.) தோல்வழங்கு சிறுநெறி: ஐங். 314; அகநா. 123:1-4, 318: 1.

    வரையயலது சிறுநெறி: “பெருவரைச் சிறுநெறி” (நற். 261:10.)

(207)
  
(வரைவிடை வைத்துத் தலைவன் பொருள்வயிற் பிரிந்த காலத்து ஆற்றாளாகிய தலைமகளை நோக்கி, “நீ ஆற்றல் வேண்டும்” என்றதோழிக்கு அவள், “நான் தலைவர் கருத்தை உணர்ந்தேன்; ஆயினும் நொதுமலர் வரையப்புகுவரேல் என் செய்வதென ஆற்றேனாயினேன்”என்றது.)
 208.    
ஒன்றே னல்லே னொன்றுவென் குன்றத்துப்  
    
பொருகளிறு மிதித்த நெரிதாள் வேங்கை 
    
குறவர் மகளிர் கூந்தற் பெய்ம்மார் 
    
நின்றுகொய மலரு நாடனொ 
5
டொன்றேன் றோழி யொன்ற னானே. 

என்பது வரைவிடை ஆற்றல் வேண்டுமென்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கபிலர்.

     1. ‘என்றேனலவென்’; 2. ‘துமித்த நெறிதாள்’; 4. ‘நின்று கொய் மலையகநாடனொடு’; 5. ‘யொன்றி னானே யொன்றேனானே’, ‘யென்றிசி னானே’.

    (ப-ரை.) தோழி--, ஒன்றேன் அல்லேன் - யான் தலைவனோடு பொருந்தாத இயல்பினை உடையேனல்லேன்; ஒன்றுவென் - பொருந்தும் இயல்பினேன்; ஆயினும், ஒன்றனான்- நொதுமலர் வரைவொடு புகுவதாகியதொரு காரணத்தினால், குன்றத்து - மலையினிடத்து, பொரு களிறு மிதித்த - ஒன்றோடொன்று பொருதகளிறுகளால் மிதிக்கப்பட்ட, நெரி தாள்வேங்கை - நெரிந்த அடியையுடைய