பக்கம் எண் :


396


  
“மறுவி றூவிச் சிறுகருங் காக்கை 
  
 அன்புடை மரபினின் கிளையோ டாரப் 
  
 பச்சூன் பெய்த பைந்நிண வல்சி 
  
 பொலம்புனை கலத்திற் றருகுவென் மாதோ 
  
 வெஞ்சின விறல்வேற் காளையொ 
  
 டஞ்சி லோதியை வரக்கரைந் தீமே”             (ஐங். 391); 
  
“பணங்களஞ் சாலும் பருவர வார்த்தவன் றில்லையன்ன 
  
 மணங்கொளஞ் சாயலும் மன்னனு மின்னே வரக்கரைந்தால் 
  
 உணங்கலஞ் சாதுண்ண லாமொண் ணிணப்பலி யோக்குவன்மாக் 
  
 குணங்களஞ் சாற்பொலி யுந்நல சேட்டைக் குலக்கொடியே”                                     (திருச்சிற். 235.)  

    “நான் ஆற்றுவித்தற்பொருட்டுப் பெருமுயற்சி செய்தேனல்லேன்.நின்வரவை முன்னரே யுணர்த்தும் நிமித்தமாகக் காக்கை கரைந்தது. அதுகாட்டி யான் ஆற்றுவித்தேன். ஆதலின் அக் காக்கையே பாராட்டுதற்குரியதாகும்” என்றாள்.

    காக்கையை இங்ஙனம் பாடிய சிறப்பால் இச்செய்யுளைப் பாடியவர்காக்கைபாடினியாரென்னும் பெயரைப் பெற்றார்.

    மேற்கோளாட்சி மு. குற்றமில்லாத தலைமகனைச் சுட்டிய தெய்வக்கடன்கொடுத்தற்கண் தோழிக்குக் கூற்று நிகழ்ந்தது (தொல். கற்பு. 9, இளம்.)

    ஒப்புமைப் பகுதி 1. திண்டேர்: குறுந். 128:2, வி-ரை.

    2. தொண்டி: குறுந். 128:2, ஒப்பு.

     2-3. நெய்யுஞ் சோறும்: “நெய்யிடை நல்லதோர் சோறும்” (திவ். திருப்பல்லாண்டு, 8); “பாற்சோறு, மூடநெய் பெய்து முழங்கைவழிவார” (திருப்பாவை.27.) தொண்டி நெல்: குறுந், 238:2-4.

    4. ஏழுகூறுதல் மரபு: குறள், 1278; சீவக. 116.

    5. தோள் நெகிழ்த்த செல்லல்: குறுந். 87:5, ஒப்பு.

    6. காக்கையது பலி: “செஞ்சோற்ற பலிமாந்திய, கருங்காக்கை” (பொருந. 183-4); “பலியுண் காக்கை”, “உகுபலி யருந்திய தொகுவிரற்காக்கை” (நற். 281:1, 343:5.)

(210)
  
(தலைவன் பிரிந்தகாலத்தில், ‘‘சுரத்திடையே தம் துணையைப் பிரிந்த விலங்கும் பறவையும் கவல்வது கண்டு நாமும் அங்ஙனம் கவல்வோமென நினைந்து தலைவர் மீள்வரோ?” என ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் அத்தகைய அருள் உடையவரல்லர். நம்மைப் பிரிந்த வன்மையையுடை யார். ஆதலின் மீளார்” என்று தோழி கூறியது.)
 211.    
அஞ்சி லோதி யாய்வளை நெகிழ 
    
நேர்ந்துநம் மருளார் நீத்தோர்க் கஞ்சல் 
    
எஞ்சினம் வாழி தோழி யெஞ்சாத் 
    
தீய்ந்த மராஅத் தோங்கல் வெஞ்சினை 
5
வேனி லோரிணர் தேனோ டூதி 
    
ஆராது பெயருந் தும்பி 
    
நீரில் வைப்பிற் சுரனிறந் தோரே.