(வி-ரை.) கொண்கன் - நெய்தல் நிலத் தலைவன் (குறுந். 230:1,299:4); தமிழ் நெறி விளக்கம், 8-ஆம் சூத்திரம் பாரக்க.
கொடுஞ்சி - தாமரை மொட்டின் வடிவமாகச் செய்து தேர்முன்நடப்படுவது; தேரூரும் தலைவர் இதனைக் கையால் பற்றிக் கொள்வதுவழக்கம்; “மணித்தேர்க் கொடுஞ்சி கையாற் பற்றி” (மணி. 4:48.) தம்பால்நயந்து வந்தோரது குறையைப் போக்குதல் அறநெறியாளர் கடனாதலின்,அதனைச் செய்யாமையால் வறிதே தலைவன் மீண்டது நாணத்தைத்தருவதாயிற்று; “இன்னா திரக்கப் படுத லிரந்தவர், இன்முகங் காணுமளவு” (குறள், 224); “இன்மை யுரைத்தார்க் கதுநிறைக்க லாற்றாக்கால்,தன்மெய் துறப்பான் மலை” (கலி. 43:26-7) என்பவற்றை ஓர்க.
‘நாம் காண வந்தானாயினும் நீ கண்டு குறைநயந்தா யில்லை’என்பது குறிப்பு. காமம் - தலைவனது காமம். தலைவன் நிலைக்குஇரங்கி, ‘யான் வருந்துவேன்” என்றாள். தலைவிக்கும் இரக்கம் உண்டாகிக் குறை நயத்தற் பொருட்டு.
ஓகாரங்கள், ஏகாரங்கள், தான்: அசை நிலைகள்.
கருப் பொருளால் இப்பாட்டு நெய்தற்குரியதாயிற்று; இங்ஙனமேநெய்தல் திணைக்குரிய பல செய்யுட்களைப் பாடிய காரணத்தால் இச்செய்யுளை இயற்றிய நல்லிசைப் புலவர், நெய்தல் கார்க்கியன் என்னும்சிறப்புப் பெற்றார் போலும்.
ஒப்புமைப் பகுதி 1. கொண்கன்: குறுந். 229:4, 230:1. கொடுஞ்சி நெடுந்தேர்: குறுந். 345:1; பொருந. 163; பெரும்பாண். 416: மதுரைக். 752.
1-3. தேர்மணி ஒலிப்பத் தலைவன் வருதல்: குறுந். 336: 3-4.
4. அளிதோதானே: குறுந். 149:1, 395:7; புறநா. 109:2, 111:1.
5. நோகோ யானே: குறுந். 131:6, ஒப்பு.
(212)
(தலைவனைப் பிரிந்த காலத்து, “நம்பாலுள்ள விருப்பத்தினால்தலைவர் தாம் சென்ற வினையை நிறைவேற்றாமல் வந்து விடுவாரோ?”என்று ஐயுற்ற தலைவியை நோக்கி, “அவர் விலங்கினமும் தமது கடமையைஆற்றும் காட்சி கண்டு தாமும் தம் கடனாற்றத் துணிவராதலின் மீளார்”என்று தோழி கூறியது.) 213. | நசைநன் குடையர் தோழி ஞெரேரெனக் |
| கவைத்தலை முதுகலை காலி னொற்றிப் |
| பசிப்பிணிக் கிறைஞ்சிய பரூஉப்பெருந் ததரல் |
| ஒழியி னுண்டு வழுவி னெஞ்சிற் |
5 | றெறித்துநடை மரபிற்றன் மறிக்குநிழ லாகி |
| நின்றுவெயில் கழிக்கு மென்பநம் |
| இன்றுயின் முனிநர் சென்ற வாறே. |
என்பது ‘நம்பெருமான், நம்பொருட்டு இடைநின்று மீள்வர்’ எனக்கவன்ற தலைமகட்குத் தோழி உரைத்தது.