கூடலூர் கிழார். (பி-ம்.) 6. ‘சூடி’.
(ப-ரை.) மரம் கொல் கானவன் - மரங்களை வெட்டியகுறவன், புனம் துளர்ந்து வித்திய- கொல்லையை உழுதுவிதைத்த, பிறங்கு குரல் இறடி - விளங்குகின்ற கதிரைஉடைய தினையை, காக்கும் - காவல் செய்யும், புறம் தாழ்அம் சில் ஓதி - புறத்தின் கண்ணே தாழ்ந்த அழகிய சிலவாகியகூந்தலையும், அசைஇயல் - மெலிந்த சாயலையும் உடைய,கொடிச்சி - தலைவியினது, திருந்து இழை - செவ்விதாகஅமைத்த ஆபரணத்தை அணிந்த, அல்குற்கு -, பெரு தழை