பக்கம் எண் :


404


    (கருத்து)தலைவர் இன்று வருவர்.

    (வி-ரை.)படர் - தலைவனை நினைந்து வருந்தும் துயர். வருவர்கொல்; கொல், அசை நிலை. இலங்கு மருப்பியானை யென்றாள்,புலியொடு பொரும் கருவி உடையன என்பதைப் புலப்படுத்த. குறும்பொறை மருங்கில் மறைந்து ஆண் யானை பெண் யானைகளைத் தழுவிநின்றன. குறிஞ்சி திரிந்த பாலை யாதலின் நெடுவரை மருங்கிற் சுரனென்றாள்.

    ஒப்புமைப் பகுதி 1. பைபய: நற். 41:3, 199:10, 378:3; ஐங். 83:1, 113:5. 5. குறும்பொறை: குறுந். 134:3, 333:4.

    அமர்துணை தழீஇ: குறுந். 237:1.

    4-6. யானை பிடியைப் புலியினின்றும் காத்தல்: மலைபடு. 307-9.

    யானை பிடியைக் காத்தல்: அகநா. 168:9-10, 189:4-6.

    7. சுரனிறந்தோர்: குறுந். 211:7, 260:8, 314:6.

(215)
  
(தலைவன் கூறிச் சென்ற கார்ப் பருவம் வந்ததாகத் தலைவிஆற்றாளெனக் கவலையுற்ற தோழியை நோக்கி, “அவர் பொருள் தேடச்சென்றார். நான் அவரை நினைந்து வருந்துகின்றேன். கார்ப்பருவமும்வந்து விட்டது; இனி என் உயிர் நில்லாது போலும்!” என்று தலைவிகூறியது.)
 216.   
அவரே, கேடில் விழுப்பொரு டருமார் பாசிலை 
    
வாடா வள்ளியங் காடிறந் தோரே 
    
யானே, தோடா ரெல்வளை நெகிழ வேங்கிப 
    
பாடமை சேக்கையிற் படர்கூர்ந் திசினே 
5
அன்ன ளளிய ளென்னாது மாமழை 
    
இன்னும் பெய்ய முழங்கி 
    
மின்னுந் தோழியென் னின்னுயிர் குறித்தே. 

என்பது பருவ வரவின்கண் ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்திஉரைத்தது.

கச்சிப்பேட்டுக் காஞ்சிக் கொற்றன்.

    (பி-ம்.) 1. ‘அவரேஎஎ’; 4. ‘படர்சார்ந்’; 6. ‘பெய்யுமுழங்கு’.

    (ப-ரை.) தோழி--, அவர் - அத்தலைவர், கேடு இல்விழு பொருள் - கேடில்லாத உயர்ந்த செல்வத்தை, தருமார் -கொணரும் பொருட்டு, பசு இலை வாடா வள்ளி காடுஇறந்தோர் - பச்சை இலைகளை உடைய வாடாத வள்ளிக்கொடி படர்ந்த காட்டைக் கடந்து சென்றார்; யான்--, தோடுஆர் எல் வளை நெகிழ - தொகுதியார்ந்த விளக்கத்தைஉடைய வளைகள் நெகிழும்படி, ஏங்கி - கவலையுற்று,பாடு அமை சேக்கையில் - படுத்தல் அமைந்த படுக்கையின்