பக்கம் எண் :


407


     ‘இப்பொழுது தினை காவலை ஒழிந்தேமாதலின் பகற்குறி வாயாது; இரவுக் குறியோ ஆற்றூறஞ்சும் நிலையினது; ஆதலின் அதனையும் விரும்பேம். இந்நிலையில் யாது செய்வேம்!’ எனக் கவன்றேன். அதற்குரிய பரிகாரம் ஒன்றை நினைந்த தலைவன் அதனை வாய்விட்டுக் கூற அஞ்சிப் பெருமூச்சு விட்டான். காமம் எவ்வளவு நுண்ணியது! யான் அவன் குறிப்பை உணர்ந்தேன். அவன் நினைந்ததே தக்க விரகாகத் தோற்றியது. ‘நீ நினைந்தது அறிவுடைமையே ஆகும்; ஆயினும் ஊரினர் பழி கூறுதற்கு இடமாம்’ என்றேன்” என்று தோழி கூறினாள். இதனால் தலைவன் உடன்போக்கு நயக்கின்றான் என்பதையும், அதனையன்றி வேறு பரிகாரம் இல்லை என்பதையும், அங்ஙனம் செய்தலே அறிவுடைமைக்கு ஏற்றது என்பதையும், பழிக்கு அஞ்சி அறிவுடைய செயலை விலக்குதல் தகாது என்பதையும் புலப்படுத்தித் தலைவியை உடம்படச் செய்தாள்.

     மேற்கோளாட்சி 6. ஐயென்னும் உரிச்சொல் வியப்பென்னும் குறிப்பில் வந்தது (தொல். உரி. 88, இளம், 89, சே. 87, ந.)

     ஒப்புமைப் பகுதி 3. யாங்குச் செய்வாம்: குறுந். 268:3, 380:5; நற். 51:1, 259:1; அகநா. 252:9. 6. ஐதே காமம்:குறுந். 401:6; நற். 143:1,மு. திருச்சிற். 181.

     (பி-ம்.) ஐதேகம்ம: நற். 52:11, 240:1

(217)
  
(பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழியை நோக்கி, “தலைவர்நம் உயிர்க்கு உயிர் போன்றவர்; அவரைப் பிரிந்து கணப்போதும்பொருந்தும் வன்மையிலேம்; இத்தகைய நம்மை அவர் மறந்து ஆண்டேஇருப்பாராயின் அவர் பொருட்டுக் கடவுளைப் பராவுதலும் நிமித்தம்பார்த்தலும் என்ன பயனைத் தரும்?” என்று தலைவி கூறியது.)
 218.   
விடர்முகை யடுக்கத்து விறல்கெழு சூலிக்குக் 
     
கடனும் பூணாங் கைந்நூல் யாவாம் 
    
புள்ளு மோராம் விரிச்சியு நில்லாம் 
    
உள்ளலு முள்ளா மன்றே தோழி 
5
உயிர்க்குயி ரன்ன ராகலிற் றம்மின் 
     
றிமைப்புவரை யமையா நம்வயின் 
     
மறந்தாண் டமைதல் வல்லியோர் மாட்டே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொற்றன் (பி-ம். கொறன.)

     (பி-ம்.) 2. ‘பூணாது’, ‘கைநூல் யாவாமற்’; 3. ‘மோராமல்’; 7. ‘வலியோர்’.

     (ப-ரை.) தோழி-, உயிர்க்கு உயிர் அன்னர் ஆகலின் -நம் உயிருக்கு உயிரைப் போன்றவராதலின், தம் இன்று -தம்மை யின்றி, இமைப்புவரை - இமைப் பொழுது அளவேனும், அமையா- பிரிந்திருத்தலைப் பொருந்தாத, நம்வயின் - நம்மை, மறந்து ஆண்டு அமைதல் வல்லியோர்