பக்கம் எண் :


411


     இடம் - செவ்வி; “இடனறிந் தூடி” (நாலடி. 384.) மன் ஆக்கப்பொருளில் வந்தது, எந்நீரிரோ வெனின் - என் நிலையில் உள்ளீரோஎன்று வினவப்புகின்; என்றது அங்ஙனம் வினவிக் குறைதீர்க்க எண்ணின்என்றவாறு.

     ஒப்புமைப் பகுதி 1. பயப்பும் நயப்பும்: அகநா. 344:12-3; குறள். 1181,1189-90.

     வல்லா கூறல்; தொல். செய். 113.

     6. தடவுநிலை: குறுந். 66:1.

(219)
  
(தலைவன் கூறிச் சென்ற கார் காலம் வரவும் அவன் வாராமையால், “தாம் வர வேண்டிய இக் காலத்தும் வந்திலர்; இனி என் செய்வேன்!” என்று தோழிக்குத் தலைவி கூறியது.)
 220.    
பழமழைக் கலித்த புதுப்புன வரகின் 
    
இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை 
    
இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை 
    
வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக் 
5
குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின் 
    
வண்டுசூழ் மாலையும் வாரார் 
    
கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே. 

என்பது பருவ வரவின்கட் கிழத்தி தோழிக்கு உரைத்தது.

ஓக்கூர் மாசாத்தி.

     (பி-ம்.) 1. ‘பழமழை கலித்த’; 3. ‘அருவிசேர்’; 4. ‘பருவீ’.

     (ப-ரை) தோழி-, பொருள் பிரிந்தோர் - பொருள்ஈட்டி வரும் பொருட்டு நம்மை இங்கு வைத்துப் பிரிந்ததலைவர், பழமழை கலித்த - பழைய மழையினால் தழைத்த,புது புனம் வரகின் - புனத்தில் உள்ள புதிய வரகினது,இரலை மேய்ந்த குறைதலை பாவை இருவி - ஆண் மான்மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை உடையகதிர் அரிந்த தாள், சேர் மருங்கின் - சேர்ந்த பக்கத்தில், பூத்தமுல்லை - மலர்ந்த முல்லைக் கொடியினது, வெருகு சிரித்தன்ன - காட்டுப் பூனை சிரித்தாற் போன்ற தோற்றத்தைஉடைய, பசு வீ மெல் பிணி குறு முகை - செவ்விப் பூவின்மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள், அவிழ்ந்த -மலர்ந்த, நறு மலர் புறவின் - நறிய மலர்களை உடையமுல்லை நிலத்தில், வண்டு சூல் மாலையும் வாரார் - வண்டுகள்அம் மலரை ஊதும் பொருட்டுச் சுற்றுகின்ற மாலைக்காலத்திலும் வாராராயினார், கண்டிசின் - இதனைக் கருதுவாயாக.