சிறைக்குடி யாந்தையார். (பி-ம்.) 1. ‘புணைகொளினே’, ‘புணைகொளினே’; 3. ‘புனல்கைவிட்டுப்’.
(ப-ரை.) மாண்ட - மாட்சிமைப்பட்ட, மாரி பித்திகத்து - மழைக் காலத்தில் மலரும் பிச்சியினது, நீர் வார் கொழுமுகை - நீர் ஒழுகும் வளவிய அரும்பினது, செ வெரிந் உறழும் - சிவந்த புறத்தை யொத்த, கொழு கடை மழை கண் - கொழுவிய கடையையும் குளிர்ச்சியையும் உடைய கண்களையும்,துளி தலை தலைஇய - மழைத்துளி தன்னிடத்தே பெய்யப்பெற்ற, தளிர் அன்னோள் - தளிரைப் போன்ற மென்மையையும் உடைய தலைவி, தலை புணை கொளின் தலைபுணை கொள்ளும் - தெப்பத்தின் தலைப்பை இத்தோழிகைக்கொண்டால் தானும் அதன் தலைப்பைக் கைக் கொள்வாள்; கடைபுணை கொளின் கடை புணை கொள்ளும் - இவள் தெப்பத்தின் கடைப்பகுதியைப் பிடித்துக் கொள்ளின்தலைவியும் அதன் கடைப் பகுதியைக் கொள்வாள்; புணைகைவிட்டு - தெப்பத்தைக் கைசோர விட்டு, புனலோடுஒழுகின் - நீரோடு இவள் சென்றால், ஆண்டும் வருகுவள்போலும் - அங்கும் தலைவி வருவாள் போலும்.