ஒப்புமைப் பகுதி 1. தலைப்புணை;அகநா 166:12, 266:3.
3. புனலோ டொழுகல்: “காமர் கடும்புனல் கலந்தெம்மோ டாடுவாள், தாமரைக்கண் புதைத்தஞ்சித் தளர்ந்ததனோ டொழுகலால்” (கலி. 39:1- 2.)
5. மாரிப் பித்திகம்: குறுந். 94:1, ஒப்பு.மு.குறுந். 168:1.
6. மழைக்கண்: குறுந். 259:4, 329:7.
5-6 பித்திகத்தின் அரும்பு சிவந்திருத்தல்: குறுந். 94:1-2, ஒப்பு.
கண்ணின் கடைக்குப் பித்திகம்: “மாரிப் பித்திகத் தீரிதழ் புரையும்,அங்கலுழ் கொண்ட செங்கடை மழைக்கண்” (அகநா. 295:19-20.)
7. துளிதலைத் தலைஇய: அகநா. 8:15, 132:9.
தலைவி மேனிக்குத் தளிர்; குறுந். 62:4-5, ஒப்பு.
5-7. தலைவியின் கடைக் கண்னுக்குப் பிச்சி அரும்பும் மேனிக்குத்தளிரும்: “மலிபெயற் கலித்த மாரிப் பித்திகத்துக், கொயலரு நிலையபெயலேர் மணமுகைச், செவ்வெரி நுறழுங் கொழுங்கடை மழைக்கட்,டளிரேர் மேனி மாஅ யோயே” (அகநா. 42:1-4.)
மு. தோழிக்கும் தலைவிக்கும் உள்ள ஒற்றுமை: நற். 128:3-4;திருச்சிற். 81; இறை. மேற். “ஓங்கும் பெரும்புகழ்”
(222)
(தலைவன் வரைபொருட்குப் பிரிந்த காலத்தில் வற்புறுத்திய தோழிக்கு,“முன் ஒரு கால் நின்சொற் கேட்டுத் தலைவனைக் கண்டு என் நலன் இழந்தேன். நலன் இழந்த புலம்பொடு இப்பொழுதும் கவல்வேனாயினேன்” என்று தலைவி கூறியது.) 223. | பேரூர் கொண்ட வார்கலி விழவிற் |
| செல்வாஞ் செல்வா மென்றி யன்றிவண் |
| நல்லோர் நல்ல பலவாற் றில்ல |
| தழலுந் தட்டையு முறியுந் தந்திவை |
5 | ஒத்தன நினக்கெனப் பொய்த்தன கூறி |
| அன்னை ஓம்பிய வாய்நலம் |
| என்னை கொண்டான்யா மின்னமா லினியே. |
என்பது வரைவிடை வேறுபட்ட கிழத்தியது வேறுபாடு கண்டுவற்புறுத்தும் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.
மதுரைக் கடையத்தார் மகன் வெண்ணாகன். (பி-ம்.) 2. ‘யென்றிவண்’, ‘யென்றிவள்’; 3. ‘நல்லோநல்ல’, ‘றில்லே’; 6. ‘அன்னையன்றோம்பிய’; 7. ‘என்னைக்’, ‘மின்ன பாலினியே’.
(ப-ரை.) தோழி, பெரு ஊர் கொண்ட ஆர்கலி விழவின் - முன்னொரு நாள் பெரிய ஊரினர் மேற்கொண்ட மிக்க