பக்கம் எண் :


463


பொருகயல் - ஒன்றை ஒன்று எதிரிடுங் கயல். முரணிய: உவம வாசகம்.

    ஒப்புமைப் பகுதி 1. பரலின் நீர்: குறுந். 65:1, ஒப்பு.

    1-2. பரலும் இரலையும்: குறுந். 65:1, ஒப்பு.

    பரலில் உள்ள நீரைப் பருகி இரலை மான் பெண் மானோடு உகளுதல்: 3:10 குறுந். 65, 1-2. இரலையும் துணையும் இணைந்திருத்தல்: குறுந். 65:1-3, ஒப்பு.

    3-4. குதிரையின் வேகத்திற்குக் காற்று: "வான் வழங்கியற்கை வளிபூட் டினையோ" (அகநா. 384:9.) 5. கயல் முரணிய வுண்கண்: "கயலென வமர்த்த வுண்கண்", "மதர்கயன் மலைப்பினன்னகண்" (அகநா. 126:19, 140:10); "கயன்மலைப் பன்ன கண்ணிணை" (யா. வி. 39, மேற்.)

(250)
  
(தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது தலைவி வருந்த, "இது கார்காலமன்று; இப்பொழுது பெய்வது காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை" என்று தோழி வற்புறுத்திக் கூறி ஆற்று வித்தது.)
 251.   
மடவ வாழி மஞ்ஞை மாயினம் 
    
கால மாரி பெய்தென வதனெதிர் 
    
ஆலலு மாலின பிடவும் பூத்தன 
    
காரன் றிகுளை தீர்கநின் படரே 
5
கழிந்த மாரிக் கொழிந்த பழநீர் 
    
புதுநீர் கொளீஇய வுகுத்தரும் 
    
நொதுமல் வானத்து முழங்குகுரல் கேட்டே. 

என்பது பிரிவிடைத் தோழி, "பருவமன்று; பட்டது வம்பு" என்று வற்புறுத்தியது (பி-ம். வற்புறுத்தது.)

    (வம்பு - காலம் அல்லாத காலத்துப் பெய்யும் மழை.)

இடைக்காடன்.

    (பி-ம்.) 1. ‘மடவரல்வாழி’, ‘யாயினம்’; 2. ‘காலைமாரி’; 3. ‘ஆலுமாலின’;7. ‘நொதுமலர்’.

    (ப-ரை.) இகுளை - தோழி, கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர் - சென்ற கார்காலத்தில் பெய்யாது எஞ்சி இருந்த பழைய நீரை, புது நீர் கொளீஇய - புதிய நீரைக் கொள்ளும் பொருட்டு, உகுத்தரும் - சொரிகின்ற, நொதுமல் வானத்து -அயன்மையை உடைய மேகத்தினது, முழங்கு குரல் கேட்டு - ஒலிக்கின்ற ஓசையைக் கேட்டு, மஞ்ஞை மா இனம் - மயில்களாகிய கரிய கூட்டங்கள், காலம் மாரி பெய்தென -