கல்லாடனார். (பி-ம்.) 2. ‘வாய்ஞெகிழ்ந்’; 6. ‘வழையமரடுக்கத்துச்’, ‘வழைமலரடுக்கத்துச்’; 7. ‘கன்றி லேரா’.
(ப-ரை.) தோழி-, குருகும் இருவிசும்பு இவரும் - நாரைகளும் கரிய வானத்தின்கண் உயரப் பறக்கும்; புதலும் - புதலிலுள்ள போதுகளும், வரி வண்டு ஊத - கோடுகளை உடைய வண்டுகள் ஊதுவதனால், வாய் நெகிழ்ந்தன - மலர்ந்தன; சுரி வளை பொலிந்த தோளும் - சுழித்த சங்காற் செய்த வளையினால் விளங்கிய தோள்களும், செற்றும் - நெகிழ்ச்சி நீங்கி வளையோடு செறியும்; ஆதலின், பொருவார் - பகைவரது, மண் எடுத்து உண்ணும் - பூமியைக் கொண்டு நுகரும், அண்ணல் யானை - தலைமை பொருந்திய யானையையும், வள்தேர் - வளவிய தேரையுமுடைய, தொண்டையர் - தொண்டை மான்களுக்குரிய, வழை அமல் அடுக்கத்து - சுர புன்னைகள் நெருங்கிய மலைப் பக்கத்தில், கன்று இல்