(முடிபு) தோழி, வந்து அடைந்திசினோர்பால், சேறிரோவெனச் செப்பலு மாற்றாம்; வினவாம்; யாங்குச் செய்வாம்!
(கருத்து) தலைவர் வரைந்து கொள்ளுதலே நலம்.
(வி-ரை.) தலைவனுடன் இடையீடின்றி இருத்தலை விரும்புபவ ராதலின் சேறிரோ எனச் செப்பும் ஆற்றல் இலராயினர். இடி முதலிய ஆற்றூறுகளை அஞ்சுபவராதலின் வருவிரோவென வினவ அஞ்சினர்.
தலைவனது வரவினால் இன்பம் உண்டாயினும் ஆற்றில் நிகழும் ஏதம் நினைந்து அச்சமும், அவன் வாராமையின் அவ்வச்ச மின்றெனினும் அவனைக் காணாத் துன்பமும் உண்டாதலின் ‘யாங்குச் செய்வாம்!’ என மயங்கினாள். இடையீடின்றி உடன் உறைவதற்குரிய இல்லற நிலையே தக்கதென்றும், அதன் பொருட்டுத் தலைவன் வரைந்து கொள்ள வேண்டும் என்றும் உய்த்துணர வைத்தாள்.
அடைந்திசினோர்: வினைமுற்றாகிக் பொருள் கொள்ளுதலும் பொருந்தும். கொல், ஏ: அசை நிலைகள்.
ஒப்புமைப் பகுதி 2. வினவலும் வினவாம்: குறுந். 37:1, ஒப்பு.
3. யாங்குச் செய்வாம்: குறுந். 217:3, ஒப்பு.
3-4. இடி பாம்பை எறிதல்: குறுந். 158:1-2, ஒப்பு.
5. தலைவன் நடுநாளில் வருதல்: குறுந். 88:4.
6. பணைத்தோள்: குறுந். 131:1, 279:8, 315:4, 318:6, 326:1, 364:5.
தோளுக்கு மூங்கில்: குறுந். 226:1-2. நெடுந்தோள்: குறுந். 163:5. மென்றோள்: குறுந். 90:7.
(268)
(தலைவன் சிறைப்புறத்தானாக, தலைவி, "எந்தையும் யாயும் ஈண்டு இப்போது இலராதலின் தலைவன் என்னைக் காண்டற்கு இஃது எளியசெவ்வியென யாரேனும் அவன்பாற் சென்று சொல்லின் நன்றாம்" என்று தோழிக்குக் கூறியது.) 269. | சேயாறு சென்று துனைபரி யசாவா |
| துசாவுநர்ப் பெறினே நன்றுமற் றில்ல |
| வயச்சுறா வெறிந்த புண்டணிந் தெந்தையும் |
| நீனிறப் பெருங்கடல் புக்கனன் யாயும் |
5 | உப்பை மாறி வெண்ணெற் றரீஇய |
| உப்புவிளை கழனிச் சென்றன ளதனாற் |
| பனியிரும் பரப்பிற் சேர்ப்பற் |
| கினிவரி னெளிய ளென்னுந் தூதே. |
என்பது தலைமகன் சிறைப்புறத்தானாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லுவாளாய்ச் சொல்லியது.