பக்கம் எண் :


497


    தூதால் உசாவுநர் என்று பொருள் கூறுதலும் பொருந்தும். தூது - தூது மொழி (சீவக. 1022, ந.)

    ஒப்புமைப் பகுதி 1. சேயாறு குறுந். 400:1.

    3. வயச்சுறா: குறுந். 230: 5; அகநா. 190:12.

    4. நீல்நிறப் பெருங்கடல்: நற். 45:2.

    5. உப்பை விற்று நெல்லைப் பெறுதல்: "உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு", "நெல்லி னேரே வெண்க லுப்பெனச், சேரி விலைமாறு கூறலின்", "நெல்லு முப்பு நேரே யூரீர், கொள்ளீ ரோவெனச் சேரிதொறு நுவலும்" (அகநா. 60:4, 140:7-8, 390:8-9.)

    6. உப்பு விளை கழனி: "இருங்கழிச் செறுவின் வெள்ளுப்பு" (மதுரைக். 117); "இருங்கழிச் செறுவி னுழாஅது செய்த, வெண்கலுப்பின் கொள்ளை" (அகநா. 140:2-3.)

(269)
  
(வினைமுற்றி மீண்டு தலைவியோடு இன்புற்ற தலைமகன் மழையைநோக்கி, "நீ நன்றாகப் பெய்வாயாக!" என வாழ்த்தியது.)
 270.   
தாழிரு டுமிய மின்னித் தண்ணென 
    
வீழுறை யினிய சிதறி யூழிற் 
    
கடிப்பிகு முரசின் முழங்கி யிடித்திடித்துப் 
    
பெய்தினி வாழியோ பெருவான் யாமே 
5
செய்வினை முடித்த செம்ம லுள்ளமோ 
    
டிவளின் மேவின மாகிக் குவளைக் 
    
குறுந்தா ணாண்மலர் நாறும் 
    
நறுமென் கூந்தன் மெல்லணை யேமே. 

என்பது வினைமுற்றிப் புகுந்த தலைமகன் கிழத்தியோடு உடன் இருந்து கூறியது.

பாண்டியன் பன்னாடு தந்தான்.

    (பி-ம்.) 2. ‘வீழ்முறை’, ‘யூழியிற’்; 3. ‘கடிப்பிடு’; 4. ‘பெய்கினி’, ‘பெய்யினி’; 6. ‘மேவலமாகிக்’, ‘மேவுதலாகிக்’.

    (ப-ரை.) யாம் , செய் வினை முடித்த செம்மல் உள்ளமோடு - செய்வினை முற்றுவித்ததனால் நிறைவை உடைய உள்ளத்தோடு, இவளின் மேவினம் ஆகி - இத்தலைவியோடு விரும்பிப் பொருந்தினேமாகி, குவளை குறு தாள் நாள் மலர் நாறும் - சூடிய குவளையினது குறிய காம்பை உடைய அலர்ந்த செவ்வியை உடைய மலர் மணக்கின்ற, நறுமெல் கூந்தல் மெல் அணையேம் - நல்ல மெல்லிய கூந்தலாகிய மெல்லிய பாயலின் கண்ணே இருந்தேம்;