பக்கம் எண் :


64


     தலைவனைக் கொடியனென்றல்: குறுந்.252:2, 278:4, 367:1; நற்.28:4; அகநா.163:12, 369:10; தஞ்சை.212.

(26)
  
(தலைவன் பிரிவினை இவள் ஆற்றாளாயினாள் என்று கவலையுற்ற தோழியை நோக்கித் தலைவி, “நான் ஆற்றியிருப்பவும் என் மாமை யழகு வீணாகும்படி அதனைப் பசலை உண்டது” என்று கூறியது).
 27.    
கன்று முண்ணாது கலத்தினும் படாது 
    
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங் 
    
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது 
    
பசலை யுணீஇயர் வேண்டும் 
5
திதலை யல்குலென் மாமைக் கவினே. 

என்பது பிரிவிடை ஆற்றாளெனக் கவன்ற தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

கொல்லன் அழிசி.

    (பி-ம்.) 4.’யுண்ணிய’, ‘யுண்ணியர்’, ‘யுணீஇய’ 5.’யல்குலெம்’.

    (ப-ரை.) நல் ஆன் தீ பால் - நல்ல பசுவின் இனிய பாலானது, கன்றும் உண்ணாது - அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்தினும் படாது - கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், நிலத்து உக்காங்கு - தரையில் சிந்தி வீணானது போல, திதலை அல்குல் - என் மாமை கவின் - எனது மாமையாகிய பேரழகை, எனக்கும் ஆகாது - எனக்கு அழகு பயந்து நிற்பதாகாமலும், என்னைக்கும் உதவாது - என் தலைவனுக்கு இன்பம் பயவாமலும், பசலை உணீஇயர் வேண்டும் - பசலையானது தான் உண்ண விரும்பா நிற்கும்.

    (முடிபு) பால் நிலத்து உக்காங்குப் பசலை மாமைக்கவினை உணீஇயர் வேண்டும்.

    (கருத்து) தலைவனது பிரிவினால் மாமைக்கவின் அழியப் பசலை பரந்தது.

    (வி-ரை.) கலம் - பால் கறக்கும் பாத்திரம்; “கறவைகன் றார்த்திக் கலநிறை பொழியும்” (மணி. 12:93) மாமை தலைவிக்கு அழகு பயந்து சிறப்புத் தருதலின், ‘எனக்கு மாகாது’என்றாள்; “தனக்கமைந் தன்றிவண் மாமைக் கவினே” (ஐங். 103:3-4). என்னை: குறுந். 24:2, வி-ரை. மாமை தலைவனுக்குப் பயன்படுதலாவது, அம் மாமைக் கவினை நோக்கி நோக்கி அவன் மகிழ்ச்சி பெறுதல்; “துறைவற், கினிய மன்றவென் மாமைக் கவினே” (ஐங். 146:2-3); “நுண்ணெழின் மாமைச் சுணங்கணியாகந்தம், கண்ணொடு தொடுத்தென நோக்கியும்” (கலித்.4:17-8) பசலை - பிரிவாற் றாமையால் உண்டாகும் வேறு பாடான பொன் நிறம். ‘பசலை உணீஇயர்’