கொண்டு ஏறுவது. முதுமால்பு அறியாதேறிய மடவோன் சிறிது ஏறிப்பின் அவ்வேணியின் இயல்பு அறிந்து அஞ்சி மீண்டும் இறங்குவன். அதிபோலச் சேய் நாடு சென்று வினை முற்றுறக் கருதிய தலைவன் தலைவியைப் பிரிதலை மேற்கொள்ள எண்ணி அப்பிரிவு தலைவியின் உயிரிழவையும் அதனால் தனக்கு இன்னாமையையும் தருதலை அறிந்து செலவு தவிர்ந்தான். உலகத்தின் மேல் வைத்துக் கூறினும் கருதியது தலைவனையே என்க.
ஏமாந்தது தான் முதலில் எண்ணியபடி செய்ய மாட்டாமல் செலவுதவிர்ந்தது.
நாம் உளேமாகப் பிரியலன் என்றது, பிரிந்தால் தலைவி உயிர் நீங்குவள் என்பதை உணர்ந்தமையைக் குறித்தது.
மே: முன்னிலை அசை.
ஒப்புமைப் பகுதி 2. வளி உலர்தல்: (குறுந். 278:1); "வீபெய் கூந்தல்வீசுவளி யுளர" (நற். 264:5); "விரைவளர் கூந்தல் வரைவளி யுளர" (புறநா. 133:4.) அசைவளி: குறுந். 28:4, ஒப்பு.
3. நுதல் மணத்தல்: குறுந். 22:5, ஒப்பு.
1-3. அரும்பின் மேல் வீசிய காற்றின் மணம் நுதலின் மணத்திற்கு: "கொய்யகை முல்லை காலொடு மயங்கி, மையிருங் கான நாறு நறுநுதல்" (அகநா. 43:9-10.) 4. கண்டது மொழிதல்: குறுந். 2:2.
5. பெருந்தேன் கண்படுவரை: "பிரசந் தூங்குமலை" (குறுந்.392:8); "தேன்றூங்கு முயர்சிமைய, மலை" (மதுரைக் 3-4); "பிரசந்தூங்கு சேட்சிமை, வரையக வெற்பன்" (அகநா. 242:21-2.)
5-6. மால்பிலேறித் தேன் எடுத்தல்: "கலைகை யற்ற காண்பினெடுவரை, நிலைபெய் திட்ட மால்புநெறி யாகப், பெரும்பயன் றொகுத்த தேங்கொள் கொள்ளை" (மலைபடு. 315-7); "அவ்வரைத், தேனி னிறாலென வேணி யிழைத்திருக்கும், கானக நாடன் மகன்" (கலி. 39:8-10); "ஈவிளை யாட நறவிளை வோர்ந்தெமர் மால்பியற்றும், வேய்விளையாடும் வெற்பா" (திருச்சிற். 133.)
(273)
(பொருள்வயிற் பிரியக் கருதிய தலைவன் பாலை நிலத்தின் வெம்மையை நினைந்து பின், "தலைவியின் இனிய தன்மைகளை நினைந்து செல்லின் அவ் வெம்மை தோற்றாது" என்று தன் நெஞ்சை நோக்கிக் கூறியது.) 274. | புறவுப்புறத் தன்ன புன்கா லுகாஅய்க் |
| காசினை யன்ன நளிகனி யுதிர் |
| விடுகணை வில்லொடு பற்றிக் கோடிவர்பு் |
| வருநர்ப் பார்க்கும் வன்க ணாடவர் |
5 | நீர்நசை வேட்கையி னார்மென்று தணியும் |
| இன்னாக் கானமு மினிய பொன்னொடு |
| மணிமிடை யல்குன் மடந்தை |
| அணிமுலை யாக முள்கினஞ் செலினே. |