4. ஆன்மணி: குறுந். 86:5-6, 190:6-7; மலைபடு. 573; நற்.264:8.
5. மு. குறுந். 270:5, ஒப்பு.
6. வல்வில்: குறுந். 100:5, ஒப்பு.
வல்வில் இளையர்: அகநா. 120:12, 152:15; பெருங். 3.17:217.
6-8. தலைவன் இளையர் போற்ற மணல் வழியில் தேரேறி வருதல்; "வினைவலம் படுத்த வென்றியொடு மகிழ்சிறந்து. போர்வலிளையர் தாள்வலம் வாழ்த்தத், தண்பெயல் பொழிந்த பைதுறு காலை ... ... ... ... ... வெண்கள ரரிமண னன்பல தாஅய் ... .... ... .... திண்டேர் வலவ கடவெனக் கடைஇ, இன்றே வருவர்" (அகநா. 74:1-12.)
(275)
(தோழியால் சேட்படுத்தப்பட்ட விடத்துத் தலைவன், "இனிமடல் ஏறிச் சான்றோரறிய வழக்குரைத்துத் தலைவியை மணம் புரிவேன்" என்று தோழி அறியும்படி முன்னிலைப் புறமொழியாகக் கூறியது.) 276. | பணைத்தோட் குறுமகள் பாவை தைஇயும் |
| பஞ்சாய்ப் பள்ளஞ் சூழ்ந்து மற்றிவள் |
| உருத்தெழு வனமுலை யொளிபெற வெழுதிய |
| தொய்யில் காப்போ ரறிதலு மறியார் |
5 | முறையுடை யரசன் செங்கோ லவையத் |
| தியான்றற் கடவின் யாங்கா வதுகொல் |
| பெரிதும் பேதை மன்ற |
| அளிதோ தானேயிவ் வழுங்க லூரே. |
என்பது தோழிக்குக் குறைமறாமல் தலைவன் (பி-ம். தலைமகன்) கூறியது.
(குறை - தலைவியை உடம்படச் செய்தல்.)
கோழிக் கொற்றன் (பி-ம். ‘கூழிக் கொற்றன்’, ‘கூளிக் கொற்றன்’).
(பி-ம்) 1. ‘பாவைதையும்’; 4. ‘ரறிதலுமறியாது’, ‘தொய்மின் மிகுதி’‘காப்போரறியார’்; 6. ‘கடவினி யாங்காவது கொல’்.
(ப-ரை.) பணை தோள் குறுமகள் பாவை தைஇயும் - மூங்கிலைப் போன்ற தோள்களை உடைய இளைய தலைவியினது பாவையைப் பண்ணி ஈந்தும். பஞ்சாய் பள்ளம் சூழ்ந்தும் - அதன் பொருட்டுப் பஞ்சாய்க் கோரை வளர்ந்த பள்ளமாகிய நீர் நிலையைச் சுற்றியும், இவள் உருத்து எழு வனம் முலை - இவளது தோற்றம் செய்து எழுந்த அழகிய நகிலில், ஒளிபெற - நிறம் பெற, எழுதிய தொய்யில் - நான் எழுதிய தொய்யிலை, காப்போர் - இவளைப் பாதுகாத்து