பக்கம் எண் :


518


வேம்பு பாலை நிலத்திற்கு உரியது. வேம்பின் பூவைக் கூறினமையின்தலைவன் பிரிந்த பருவம் இளவேனில் என்பது பெறப்படும் (குறுந். 24.)

  
"அவரோ வாரார் தான்வந் தன்றே  
  
 வேம்பி னொண்பூ வுறைப்பத்  
  
 தேம்படு கிளவியவர் தெளிக்கும் பொழுதே" (ஐங். 50)  

என்னும் இளவேனிற் பத்துச் செய்யுளைக் காண்க.

     மலரைப் பனந்தோட்டில் வைத்துக் கட்டி அணிந்து கொள்ளல் மரபு. சுரி - சுருள். தலை மணந்த: தலை, அசை நிலை; இடமுமாம். குன்று தலைமணந்த கானம் என்றது குறிஞ்சியும் முல்லையும் கலந்து இயல்பு திரிந்த பாலை நிலம் என்றபடி.

     கொல்; ஐயம், ஓ, ஏ: அசை நிலைகள்.

     ஒப்புமைப் பகுதி 1-2. மணல் சூழ்ந்த பனை: குறுந். 372:1-2.


     3-4. வேப்பம் பூவை ஆடவர் அணிதல்: பெரும்பாண். 59-61.

     1-4. பூக்களைப் பனந்தோட்டுடன் வைத்துச் சூடுதல்: "போர்படுமள்ளர் போந்தொடு தொடுத்த, கடவுள் வாகைத் துய்வீ", "நாறிணர்க்கொன்றை வெண்போழ்க் கண்ணியர்" (பதிற். 66:14-5, 67:13); "வட்கர்போகிய வளரிளம் போந்தை, உச்சிக் கொண்ட வூசி வெண்டோடு,வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇச், சுரியிரும் பித்தை பொலியச்சூடி", "ஓங்குநிலை வேங்கை யொள்ளிணர் நறுவீப், போந்தையந் தோட்டிற் புனைந்தனர் தொடுத்து" (புறநா. 100:3-6, 265:3-4); "வட்கர்போகிய வான்பனந் தோட்டுடன், புட்கைச் சேனை பொலியச் சூட்டி .... .,... .... .... வஞ்சி சூடுதும்" (சிலப். 25:146-9.)

(281)
  
(தலைவன் வினைவயிற் பிரிந்த காலத்தில் அவன் கூறிய கார்ப்பருவம் வந்ததாக, "இப் பருவத்தின் அடையாளங்களைத் தாம் சென்ற இடத்தே கண்டு இனி நீ ஆற்றாய் என்பதறிந்து தலைவர் மீண்டு வருவார்" என்று தோழி தலைவிக்குக் கூறியது.)
 282.    
செவ்விகொள் வரகின் செஞ்சுவற் கலித்த்  
    
கௌவை நாற்றின் காரிரு ளோரிலை் 
    
நவ்வி நாண்மறி கவ்விக் கடன்கழிக்கும் 
    
காரெதிர் தண்புனங் காணிற் கைவளை 
5
நீர்திகழ் சிலம்பி னோராங் கவிழ்ந்த  
    
வெண்கூ தாளத் தந்தூம்பு புதுமலர் 
    
ஆர்கழல் புகுவ போலச்  
    
சோர்குவ வல்ல வென்பர்கொ னமரே. 
    

என்பது வினைவயிற் பிரிந்தவிடத்துத் தோழி கிழத்திக்கு உரைத்தது.

நாகம் போத்தன்.

     (பி-ம்.) 3. ‘நன்மறி’; 5. ‘கவிந்த’; 7. ‘புகுவீபோலச்’; 8. ‘வென்பர்கொலவரே’.