வரகு புனத்தின் நிலை கண்டு, தாம் மீள்வதாகக் கூறிய கார்ப்பருவம் வந்தமையையும், அதனால் கைவளை சோரும் நின் நிலைமையையும் உணர்ந்து விரைவில் மீள்வர் என்பது கருத்து.
மேற்கோளாட்சி 3. மறியென்னும் இளமைப் பெயர் நவ்வியோடு அடுத்து வந்தது (தொல். மரபு. 12, பேர.்)
ஒப்புமைப் பகுதி 1-2. சுவலில் விளைந்த பயிர்: குறுந். 204:3; பெரும்பாண். 131; மலைபடு. 436.
1-2. மான் வரகிலையைக் கறித்தல்: குறுந்.220:1-2, ஒப்பு.
4. காரெதிர் புனம்: குறுந். 233:4, ஒப்பு.
5. நீர்திகழ் சிலம்பு: குறுந். 52:1.
6. வெண் கூதாளம்: முருகு. 192; பட். 85.
6-7. ஆர் கழல்பு மலர் உகுதல்: "வெண்பூ ... ... ... ... ... ஆர் கழல்பு, களிறுவழங்கு சிறுநெறி புதையத் தாஅம்" (குறுந். 329:1-3); "ஆர்கழல், பாலி வானிற் காலொடு பாறி" (அகநா. 9:6-7.)
(282)
(தலைவன் பொருள் ஈட்டச் சென்ற காலத்தில் ஆற்றான் எனக் கவன்ற தோழியை நோக்கி, "அவர் பிரிவு கருதி வருந்தேன்; அவர் சென்ற பாலை நிலத்தில் உள்ளார் செய்யும் தொழில் கொடுமை எண்ணி அஞ்சினேன்" என்று தலைவி கூறியது.) 283. | உள்ளது சிதைப்போ ருளரெனப் படாஅர் |
| இல்லோர் வாழ்க்கை யிரவினு மிளிவெனச் |
| சொல்லிய வன்மை தெளியக் காட்டிச் |
| சென்றனர் வாழி தோழி யென்றும் |
5 | கூற்றத் தன்ன கொலைவேன் மறவர் |
| ஆற்றிருந் தல்கி வழங்குநர்ச் செகுத்த |
| படுமுடை பருந்துபார்த் திருக்கும் |
| நெடுமூ திடைய நீரி லாறே. |
| ் |
என்பது தலைமகன் பொருள்வயிற் பிரிந்தவழி ஆற்றாளெனக் கவன்ற தோழிக்கு, "அவர் பிரிய, ஆற்றேனாயினேன் அல்லேன்; அவர் போயின கானத்துத் தன்மை நினைந்து வேறுபட்டேன்" என்று கிழத்தி சொல்லியது,
பாலை பாடிய பெருங்கடுங்கோ. (பி-ம்.) 2. ‘யிறவினு மிழிவெனச்’; 3. ‘சொல்லிவண்மை’; 7. ‘படுமுடைப்’; 8. ‘நெடுமு ருடையய.
(ப-ரை.) தோழி , உள்ளது சிதைப்போர் - தம்முடைய முன்னோரால் தேடி வைக்கப் பெற்றுத் தம்பால் உளதாகிய