பக்கம் எண் :


67


    (வி-ரை.) முட்டுதல் உடம்பாற்றீண்டுதல் என்றும், தாக்குதல் கோல் முதலிய கருவிகளால் தீண்டுதல் என்றும் கொள்க; முட்டுதல் - எதிர்த்தலுமாம் (தொல். களவு.21.) ஓர் பெற்றி மேலிட்டுக் கூவுதலாவது, ‘பாம்பு, பாம்பு’ என்றேனும், ‘திருடன் திருடன்’ என்றேனும் பிரிவாறேனும் கூவுதல். இங்ஙனம் கூவுதலால் ஊரார் எழுந்து அலர் தூற்றுவர்; அவ்வலர் தலைவன் தன்னை வரைந்து கொள்வதை விரைவில் கூட்டும் உபாயமாதலின் தலைவிக்கு இன்பம் பயக்கும்; “அலரெழ வாருயிர் நிற்கும்” (குறள், 1141.) உயவு: உயாவென்பதன் திரிபு; “உயாவே யுயங்கல்” (தொல்.உரி.71) உயவு நோய்: வருத்தத்தை உடைய காம நோய் (கலி. 35:22, ந.) நோய் அறியாது துஞ்சும் என்றமையால் தலைவி துஞ்சாமை பெறப்படும். ஊர்க்கு - ஊரை; உருபு மயக்கம்; “உரைசால் பத்தினிக் குயர்ந்தோ ரேத்தலும்” (சிலப். பதி. 56).

     ஊர்க்கு - ஊரினர்பொருட்டு, முட்டுவேன்கொல் - சுவர் முதலியவற்றில் முட்டிக் கொள்வேனோ? தாக்குவேன்கொல் - தாக்கிக் கொள்வேனோ என்று பொருள் கூறலும் ஆம்.

    ஒப்புமைப் பகுதி 3. ஆஅ: “ஆஅ வளிய வலவன்றன் பார்ப்பினொடு” (பழம் பாடல்): “ஆவம்மா வம்மாவென் னம்மா வகன்றனையே” (சீவக. 1804.)

    அசைவளி: குறுந். 273:2; கலி . 126:12.

    4. அசைவளி அலைத்தல்: “தைவர லசைவளி மெய்பாய்ந் துறுதரச், செய்வுறு பாவை யன்னவென், மெய்பிறி தாகுதல்” (குறுந். 195:5-7.)

    5. உயவு நோய்: கலி.35:22, 58:7, 113:3. துஞ்சும் ஊர்: குறுந். 302:7. தலைவி துஞ்சாமை: குறுந். 6:4, ஒப்பு.

(28)
  
(தலைவன் இரவுக் குறியை விரும்ப, அதனைத் தோழி மறுத்து, வரைந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பித்தாள்; பின்னும் அவனது நெஞ்சம் இரவுக் குறியை விரும்ப, “நின் குறையை அறிந்து நிறைவேற்றுவார் அரியராகவும், நீ வருந்துதலினாற் பயன் யாது?” என்று அவன் அதனை நோக்கி இரங்கிக் கூறியது).
 29.    
நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப் 
    
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல  
    
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி 
    
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும்  
5
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு  
    
மகவுடை மந்தி போல 
    
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே 

என்பது இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைமகன், இவர் எம்மை மறுத்தார் என்று வரைந்து கொள்ள நினையாது பின்னுங் கூடுதற்கு அவாவுற்ற நெஞ்சினை நோக்கிக் கூறியது (பி-ம் . நோக்கிக் கூறுகின்றான்).

    (இவர் - தோழியும் தலைவியும்).