(மேற்கோளாட்சி) 5-6. மகவென்பது குரங்கின் இளமைப் பெயர் (தொல். மரபு.14, பேர்.) மு. தோழியால் வரைவு கடாவப்பட்ட பின்னரும் தலைவன் களவொழுக்கம் வேண்டிக் கூறியது (தொல்.களவு. 17, இளம்.) தோழி இவ்விடத்துக் காவலர் கடியரெனக் கூறிச் சேட்பட நிறுத்தலில் தனக்கு உண்டாகிய வருத்தத்தால் தலைவனுக்குக் கூற்று நிகழும் (தொல். களவு.11, ந.)
ஒப்புமைப் பகுதி 2. நீரையேற்ற பசுங்கலம்: “ஈர்மட் செய்கை நீர்படு பசுங்கலம், பெருமழைப் பெயற்கேற் றாங்கு” (நற்.308:9-10): “பசுமட், கலத்துணீர் பெய்திரீஇ யற்று” (குறள்.660); “எழிலையாழ் செய்கைப் பசுங்கலன் விசும்பி னின்றுளி படநனைந் துருகி” (திருவிசைப்பா, கருவூர்த் திருவிடைமருதூர், 7)
3. ஆசை வெள்ளம்: “இருவே நீந்தும் பருவரல் வெள்ளம்” (நற்.339:4).
4. அரிது: குறுந்.298:2. நன்றும் பெரிது: குறுந்.237:3. 3-4 நெஞ்சுக்கு உள்ளம் கூறும் மரபு: “வருந்தினை வாழியென்னெஞ்சே ... செல்லினிச் சிறக்கநின் னுள்ளம்” (அகநா.19:2-8)
6. மகவுடை மந்தி: “பார்ப்புடை மந்திய மலை”, “பைங்கண் மந்தி பார்ப்பொடு கவரும்” (குறுந்.278:7, 335:4): “மலையார் சாரன் மகவுடன் வந்த மடமந்தி” (தே.திருஞா.திருக்குற்றாலம்). 6-7.மந்தி மகவைத் தழுவுதல்: “குந்தி வாழையின் கொழுங்கனி நுகர்ந்துதன் குருளையைத் தழுவிப்போய், மந்தி மாம்பணை மேல்வைகு நாங்கூர் வண்புருடோத் தமமே” (திவ்.பெரியதிரு.4.2:9).
மு. | “பின்னிலை வேட்டல் பெரிதினி தேபின்னர் மாறிநின்று |
| தன்னிலை தேய்ந்து தணியா ருயிரைத் தழீஇக்கொடொன்றா |
| முன்னிலை யீச னருள்போற் றழுவி முனிதுயர்கூர் |
| என்னிலை நோக்கி யிரங்கவல் லார்ப்பெறி னேழைநெஞ்சே” |
| (தணிகைப்.களவுப்.259) |
(29)
(தலைவன் வரைபொருளின் பொருட்டுப் பிரிந்த காலத்தில் தலைவியது ஆற்றாமைக் காரணத்தைத் தோழி வினாவத் தலைவி, “இயல்பாக ஆற்றியிருக்கும்யான் தலைவனை மருவியதாகக் கண்ட பொய்க் கனாவினால் வருத்தமுறு வேனாயினேன்” என்று கூறியது.) 30. | கேட்டிசின் வாழி தோழி யல்கற் |
| பொய்வ லாளன் மெய்யுறன் மரீஇய |
| வாய்த்தகைப் பொய்க்கனா மருட்ட வேற்றெழுந் |
| தமளி தைவந் தனனே குவளை |
5 | வண்டுபடு மலரிற் சா அய்த் |
| தமியேன் மன்ற வளியேன் யானே, |