பக்கம் எண் :


71


    3. தலைவி கனாக்காண்டல்: குறள்.1211-20. வாய்த்தகைப் பொய்க்கனா: “வறுங்கை காட்டிய வாயல் கனவின், ஏற்றேக் கற்ற வுலமரல்” (அகநா. 39:23-4) ஏற்றெழுதல்: மலைபடு 257; கலி.12:8, 37:20; பெருங்.2.11:66. பொய்க்கனாக் கண்டு எழுதல்: குறுந். 147:3-4.

    1-3. அல்கற்கனா: “அல்கற், கனவுகொ னீகண்டது” (கலி.90:21).

    5. வண்டுபடு மலரைப் போல மெலிதல்: “காமருதேன், கரும்புண் டெழுநன் மலரிற் றொலைநலம்” (அம்பிகாபதிகோவை, 16); “வண்டுபோ கட்ட மலர்போன் மருண்மாலை, உண்டுபோ கட்ட வுயிர்க்கு” (நள. சுயம்வர. 119).

 மு.  
“களியானைத் தென்னன் கனவின்வந் தென்னை  
  
 அளியா னளிப்பானே போன்றான் - தெளியாதே 
  
 செங்காந்தண் மெல்விரலாற் சேக்கை தடவந்தேன் 
  
 என்காண்பே னென்னலால் யான்”                    (முத்.63)  
(30)
  
(அயலார் தலைவியை மணம் செய்யும் பொருட்டு முயன்ற காலத்தில் அதுகாறும் தலைவனைப் பற்றிய செய்தியை வெளியிடாத தலைவி, “நான் ஆடுகளத்தில் துணங்கையாடும் இயல்புடையேன்; என்னோடு நட்பு செய்து பிரிந்தமையால் என் கைவளைகளை நெகிழச் செய்த தலைவன் அத்துணங்கைக்குத் தலைக்கை தந்தான். அவன் இப்பொழுது எங்கே உள்ளானோ? பல இடங்களில் தேடியும் கண்டேனில்லை” என்று உண்மையைத் தோழிக்கு வெளிப்படுத்தியது).
 31.    
மள்ளர் குழீஇய விழவி னானும்  
    
மகளிர் தழீஇய துணங்கை யானும்  
    
யாண்டுங் காணேன் மாண்டக் கோனை  
    
யானுமோ ராடுகள மகளே யென்கைக் 
5
கோடீ ரிலங்குவளை நெகிழ்த்த 
    
பீடுகெழு குரிசிலுமோ ராடுகள மகனே. 

என்பது நொதுமலர் வரைவுழித் தோழிக்குத் தலைமகள் அறத்தொடு நின்றது.

    (நொதுமலர் - தலைவன் அல்லாத அயலார். வரைவுழி -மணத்திற்கு உரிய பரிசத்தோடு வந்தபொழுது).

ஆதிமந்தியார் (கு-பு.) ஆதிமருதியார் என்று படித்தற்கும் இடமுண்டு.

    (பி-ம்.) 3. ‘ஆண்டுங்’ 5. ‘ஞெகிழ்த்த’ 6. ‘குரிசிலு மாடுகள’

    (ப-ரை.) மாண் தக்கோனை - மாட்சிமை பொருந்திய தகுதியை உடையோனை, மள்ளர்குழீஇய விழவினானும் - வீரர் கூடியுள்ள சேரி விழாவின் கண்ணும், மகளிர் தழீஇய