பக்கம் எண் :


74


மாட்டும் விரைஇ, வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப், பேரிசை நன்னன் பெறும்பெயர் நன்னாள், சேரி விழவி னார்ப்பெழுந் தாங்கு” (மதுரைக். 327-9, 614-9); “விழவயர் துணங்கை” (நற்.50:3); “துணங்கையர் குரவையர்” (சிலப்.5:70). 4. ஆடுகள மகள்: அகநா.370: 15.5 கோடீரிலங்குவளை, சங்கை அறுத்து வளை செய்தல், வளை நெகிழ்தல்: குறுந். 11:1, ஒப்பு.

  மு. 
“வில்லார் விழவினும் வேலாழி சூழுலகில்  
  
  நல்லார் விழவகத்து நாங்காணேம் - நல்லாய் 
  
  உவர்க்கத் தொரோவுதவிச் சேர்ப்பனொப் பாரைச்  
  
  சுவர்க்கத் துளராயிற் சூழ்”                       (திணைமா. 62) 
  
    “தையனல் லார்கள் குழாங்கள் குழிய குழுவினுள்ளும் 
  
     ஐயநல் லார்கள் குழிய விழவினு மங்கங்கெல்லாம்  
  
     கையபொன் னாழிவெண் சங்கொடுங் காண்பா னவாவுவனான் 
  
     மையவண் ணாமணி யேமுத்த மேயென்றன் மாணிக்கமே”                    (திவ். திருவிருத்தம், 84)  
(31)
  
(தோழியினிடம் தன் குறைகூறி அவள் உடம்படாமையை அறிந்த தலைவன், “யான் தலைவியின் பிரிவை ஆற்றேன்; அவளை அடையும் பொருட்டு மடலேறினால் அவளுக்குப் பழி உண்டாகும்; வாளாவிருப்பின் வாழ்தலும் பழி; ஆதலின் இவை நேரா வண்ணம் நீ குறைநேர்வாயாக” என்று அவளுக்குக் கூறியது).
 32.    
காலையும் பகலுங் கையறு மாலையும்  
    
ஊர்துஞ் சியாமமும் விடியலு மென்றிப் 
    
பொழுதிடை தெரியிற் பொய்யே காமம் 
    
மாவென மடலொடு மறுகிற் றோன்றித்  
5
தெற்றெனத் தூற்றலும் பழியே 
    
வாழ்தலும் பழியே பிரிவுதலை வரினே. 

என்பது பின்னின்றான் கூறியது (பி-ம். கூறுகின்றது).

    (பின் நின்றான் - தோழி தன் குறையை ஏற்றுக் கொள்ளாத காலத்தில் அவளுடைய உதவியை விரும்பி அவளை இரந்து நின்ற தலைவன்; “இரந்து பின்னிற்றல்” (நம்பி.143).

அள்ளூர் நன்முல்லையார்.

    (பி-ம்.) 2.’விடியலுமின்றிப்’ 5. ‘தோற்றெனத்’

    (ப-ரை.) காலையும் - காலைப்பொழுதும், பகலும் - உச்சிப் பொழுதும், கை அறு மாலையும் - பிரிந்தோர் செயலறுதற்குக் காரணமாகிய மாலைப் பொழுதும், ஊர் துஞ்சு யாமமும் - ஊரினர் துயில்கின்ற இடையிரவும்,