உயிர் நீத்தலே நன்று’ என்று தலைவன் தோழிக்கு இரக்கம் உண்டாகும்படி கூறினான்.
களவொழுக்கத்தின் இலக்கணங்களுள் இறுதியாக சாக்காடு என்பது இதனுள் வந்தது (தொல். களவு. 9.).
(மேற்கோளாட்சி) 1-3. சிறுபொழுது ஐந்து (தொல்காப்பிய முதற் சூத்திர விருத்தி).
ஒப்புமைப் பகுதி 1. கையறுமாலை: (குறுந்.387:2:ஐங். 183:4.) மாலையில் தனித்தோர் செயலறுதல்: “ஐயறி வகற்றுங் கையறு படரோ, டகலிரு வான மம்மஞ் சீனப், பகலாற்றுப் படுத்த பழங்கண் மாலை” (அகநா. 71:7-9; குறள். 1221-1230, பார்க்க). 2. ஊர் துஞ்சியாமம்: “துஞ்சூர் யாமத் தானும்” (குறுந். 302:7); “உறைமயக் குற்ற வூர்துஞ் சியாமத்து” (நற்.262: 3); “துஞ்சூர் யாமத்துத் துயிலறியலரே” (ஐங். 13:4) 3. காமத்தாற் பொழுது இடை தெரியாமை: “போழ்திடைப் படாமன் முயங்கியு மமையார்”, “பொழுதிடைப் படநீப்பின் வாழ்வாளோ” (கலி.4:10,24): “நாளிடைப் படினென் றோழி வாழாள்”, “எல்லையு மிரவு மென்னாது கல்லெனக், கொண்டல் வான்மழை பொழிந்த வைகறைத், தண்பனி யற்சிரந் தமியோர்க் கரிதெனக், கனவினும் பிரிவறி யலனே” (அகநா. 112:9, 178:17-20); “போகப் பெருநுகம் பூட்டிய காலை, மாக விசும்பின் மதியமு ஞாயிறும், எழுதலும் படுதலு மறியா வின்பமொடு”, “மட்டுவிளை கோதையொடு மகிழ்ந்துவிளை யாடிச், செங்கதிர்ச் செல்வ னெழுச்சியும் பாடும், திங்களு நாளுந் தெளிதல் செல்லான்” (பெருங். 2.9:182-5, 4. 2: 86-8); “தூம மேகம ழுந்துகிற் சேக்கைமேற், காம மேநுகர் வார்தம காதலால், யாம மும்பக லும்மறி யாமையாற், பூமி மாநகர் பொன்னுல கொத்ததே” (சீவக. 135); “கங்குலும் பகலும் பிரிவில ராகிக் காதல்வெள்ளத்திடை யழுந்திப், பங்கமில் போக நுகருநாள் வந்துபுகுந்தது பங்குனித் திங்கள்” (உத்தர. சீதை வனம் 11).
4. மடல்மா: குறுந். 17:1, ஒப்பு. மடலேறி மறுகில் தோன்றல்: குறுந். 17:1-3, ஒப்பு.
5. தெற்றென: பொருந. 174; அகநா.48:4; குறள், 581.
6. பிரிவினால் வாழாமை: (குறுந். 57:3-4, 168;7); “பிரியின் வாழா தென்போ தெய்ய” (பழம்பாடல்).
(32)
(தலைவனுக்குத் தூதாக வந்த பாணனை ஏற்றுக் கொண்ட தலைவி, “இவன் நன்றாகப் பேசுகின்றான்; இங்கே விருந்து பெறுவான்” என்று உணர்த்தியது). 33. | அன்னா யிவனோ ரிளமா ணாக்கன் |
| தன்னூர் மன்றத் தென்னன் கொல்லோ |
| இரந்தூ ணிரம்பா மேனியொடு |
| விருந்தி னூரும் பெருஞ்செம் மலனே. |