கள்ளிலாத்திரையன். (பி-ம்.) 1. ‘ரார்த்திய’; 2. ‘பள்ளை தந்த’, ‘வஞ்சியங்’; 5. ‘வயல்வெள்’; 7. ‘வருமோ’; 8. ‘கொழுநர்க’்.
(ப-ரை.) தோழி, கள்ளில் கேளிர் ஆத்திரை -கள்ளைக்குடிக்கும் விருப்பத்தை உடையவர்களது பயணம், உள்ஊர் பாளை தந்த பஞ்சி அம் குறு காய் - ஊரினகத்துள்ளபாளையினால் ஈனப்பட்ட நாரையுடைய குறிய காய்களைக்கொண்ட, ஓங்கு இரு பெண்ணை நுங்கொடு பெயரும் -உயர்ந்த கரிய பனையினது நுங்கைக் கைக்கொண்டுமீள்வதற்கு இடமாகிய, ஆதி அருமன் முது ஊர் அன்ன -ஆதி அருமனுக்குரிய பழைய ஊரைப் போன்ற, அயம்வெள் ஆம்பல் அம் பகை நெறி தழை - நீரில் வளர்ந்தவெள்ளாம்பலினது அழகிய மாறுபட்ட முழு நெறியைஉடைய தழையுடை, தித்தி குறங்கின் ஊழ் மாறு அலைப்ப -தேமலை உடைய துடையின்கண் முறையே மாறி மாறிஅசைய, செ இழை - பொன்னால் செய்த செவ்வியஅணிகலன்களை உடைய பரத்தை, அந்தில்-அவ்விடத்திலே,கொழுநன் காணிய - தலைவனைக் காணும் பொருட்டு,வரும் - வருவாள்; யான் அளியேன் - நான் இரங்கத் தக்கேன்.