அஞ்சிலாந்தை. (பி-ம்.) 2. ‘தழூஉவணி’; 4. ‘மன்னே’; 5. ‘துத்திப்பாந்தட் பைனதக’;6. ‘துயவுக்கோட’், ‘பசுங்கழைத’்.
(ப-ரை.) கடல் உடன் ஆடியும் - கடலிடத்தே ஒருங்கேநீர் விளையாட்டுப் புரிந்தும், கானல் அல்கியும் - கடற்கரைச்சோலையினிடத்தே தங்கியும், தொடலை ஆயமொடு -மாலையையுடைய மகளிர் கூட்டத்தோடு, தழுவணி அயர்ந்தும் - குரவை கோத்து ஆடியும், நொதுமலர் போல -அயலாரைப் போல, கதுமென வந்து - விரைவாக வந்து,முயங்கினன் செலின் - தலைவன் தழுவிச் செல்வானாயின்,அலர்ந்தன்றுமன் - அலருண்டாயிற்று; அஃது இப்பொழுதுகழிந்தது. இப்பொழுது அங்ஙனம் செய்யாமல், தித்தி பரந்த -தேமல் படர்ந்த, பைத்து அகல் - விரிந்து அகன்ற, அல்குல் -அல்குலினது, திருந்து இழை துயல்வு கோடு அசைத்த -திருத்தமுறச் செய்த அணிகலன்கள் அசைதலையுடையபக்கத்தின்கண் கட்டிய, பசு குழை தழையினும் - பசியதளிராற் செய்த தழையைக் காட்டினும், உழையின் போகான்-மிக அணிமையிலிருந்து போகானாகி, அக்காரணத்தால்,யாய் காத்து ஓம்பல் - தாய் நம்மை இற்செறித்துக் காவல்செய்தலை, தான் தந்தனன் - தானே உண்டாக்கினன்.