பக்கம் எண் :


541


     (முடிபு) ஆடியும் அல்கியும் அயர்ந்தும் முயங்கினன் செலின்,அலர்ந்தன்று மன்; உழையிற் போகான், தான் ஓம்பலைத் தந்தனன்.

     (கருத்து) தலைவனை யறிந்த தாய் நின்னை இற்செறிக்கக் கருதினாள்.

     (வி-ரை.) இது சிறைப்புறம். பல மகளிரொடு கூடிக் கடலில்நீராடியும்,பொழிலில் விளையாடியும், குரவையாடியும் விளையாடும் காலத்தில்அயலானைப் போல வந்தால் அலருண்டாகும்; அவ்வலர் என் ஆருயிர்நிற்றற்குரிய துணையாகும் (குறள், 1141) என்றாள். அலர்ந்தன்று மனனேயென்னும் பாடத்திற்கு மனம் மகிழ்ச்சியால் மலர்ந்ததென்று பொருள்கொள்க. இழை - இங்கே மேகலை. கோடு - பக்கம்.

     மேற்கோளாட்சி மு. பகற்குறிக்கண் சிறைப்புறமாகச் செறிப்பறிவுறீஇயது. (தொல். களவு. 23, ந.)

     ஒப்புமைப் பகுதி 1. கடலாடுதலும் கானலில் விளையாடுதலும் அப்போது தலைவன் வருதலும்: “கடலாடு மகளிர் கான லிழைத்த, சிறுமனைப் புணர்ந்த நட்பே” (குறுந். 326:2-3.)

     5. தித்தி பரந்த அல்குல்: குறுந். 27:5, ஒப்பு.

     5-6. அல்குற்கோடு: “கோடேந் தல்குல்” (நற். 282:2.)

     6-7. தழையுடுத்தல்: குறுந். 125:3, ஒப்பு.

(294)
  
(பரத்தையிற் பிரிந்துவந்த தலைவன் தோழியை வாயில் வேண்டியபொழுது அவள், “நீ பரத்தையரோடிருந்தமை தோன்ற வந்தாய்; நின்வளத்திற்குக் காரணமான தலைவியை நீத்து உறைந்தாய்” என்று கூறியது.)
 295.    
உடுத்துந் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயும் 
    
தழையணிப் பொலிந்த வாயமொடு துவன்றி 
    
விழவொடு வருத நீயே யிஃதோ 
    
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கை 
5
பெருநலக் குறுமகள் வந்தென 
    
இனிவிழ வாயிற் றென்னுமிவ் வூரே. 

என்பது வாயில் வேண்டிச் சென்ற கிழவற்குத் தோழி உரைத்தது.

தூங்கலோரி.

    (பி-ம்.) 1. செறீஇயும்; 3. நின்றாய் நீயே; 4. ஓரா வல்சிச்.

     (ப-ரை.) உடுத்தும் - உடையாக உடுத்துக் கொண்டும்,தொடுத்தும் - மாலையாகத் தொடுத்தணிந்தும், பூண்டும் -குழை முதலிய அணிகலன்களாக அணிந்தும், செரீஇயும் -கூந்தலின் கண்ணே செருகியும், தழை அணி பொலிந்தஆயமொடு - தழையலங்காரத்தினாற் பொலிவு பெற்றபரத்தையர் கூட்டத்தோடு, துவன்றி - நெருங்கி, நீ விழவொடுவருதி - நீ நீர்விழாவிற்குரிய அடையாளங்களோடு வாராநின்