பக்கம் எண் :


543


தலைவர்க்கும் தலைவியர்க்கும் தோன்றிய வருத்தமிகுதியைத் தீர்க்கக்கருதி, அவரது இல்வாழ்க்கை நிகழ்ச்சிக் கண்ணே தமக்கு வருத்தந்தோன்றிற்றாகக் கூறியது. ‘இதனுள் முன்னர் நிகழ்த்திய வாழ்க்கை இவள்வந்தாளாகப் புறத்து விளையாடும் விழவுளதாயிற்றென்று இவ்வூர் கூறாநிற்கும் செல்வம், இவளை நெகிழ்ந்தாற் பழைய தன்மையாமென்று அறிவர் இரங்கிக் கூறியவாறு காண்க’ (தொல். பொருள். 32, ந.)

     ஒப்புமைப் பகுதி 1-2. தழையணியாயம்: குறுந். 125:3, ஒப்பு.

     5. குறுமகள்: குறுந். 89:7, ஒப்பு.

(295)
  
(பகற்குறிக்கண் இடையீடின்றித் தலைவனோடு அளவளாவும்நிலைபெறாத தலைவி வருந்தி, தலைவன் சிறைப்புறத்தானாக, தோழிக்குக்கூறுவாளாய், “நீ அவரைக் கழறுதலை யொழி” என்று கூறும் வாயிலாகத்தன் நிலையைப் புலப்படுத்தியது.)
 296.    
அம்ம வாழி தோழி புன்னை 
    
அலங்குசினை யிருந்த வஞ்சிறை நாரை 
    
உறுகழிச் சிறுமீன் முனையிற் செறுவிற் 
    
கண்ணாறு நெய்தல் கதிரொடு நயக்கும் 
5
தண்ணந் துறைவற் காணின் முன்னின்று 
    
கடிய கழற லோம்புமதி தொடியோள் 
    
இன்ன ளாகத் துறத்தல் 
    
நும்மிற் றகுமோ வென்றனை துணிந்தே. 

என்பது காணும் பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாயதலைமகள், தலைமகன் சிறைப்புறத் தானாகத் தோழிக்குச் சொல்லுவாளாய்ச் சொல்லியது.

     [‘இவ்வகை பகற்குறி வந்து ஒழுகாநின்ற தலைமகனைக் காணும்பொழுதிற் காணாப் பொழுது பெரிதாகலான் ஆற்றாளாய்’ (இறை. 18,உரை.)]

பெரும்பாக்கன் (பி-ம். பெரும்பாகன்.)

     (பி-ம்.) 3. ‘அறுகழிச்’, ‘முணையிற’்; 4. ‘கண்ணார்’; 8. ‘நும்மிதிற்’,‘நும்மினிற்’, ‘நுமிதற்’.

     (ப-ரை.) தோழி--, அம்ம - ஒன்று கூறுவன் கேட்பாயாக: புன்னை அலங்கு சினை இருந்த அம் சிறை நாரை -புன்னையினது அசைந்த கிளையினிடத்திருந்த அழகியசிறகையுடைய நாரை, உறுகழி சிறு மீன் முனையின் -மிக்க கழியிடத்துச் சிறுமீன் உணவை வெறுத்ததாயின்,செறுவில் - வயலிலுள்ள, கள் நாறு நெய்தல் கதிரொடுநயக்கும் - கள் மணக்கின்ற நெய்தற் பூவை நெற்கதிரோடு