பக்கம் எண் :


546


     ஒப்புமைப் பகுதி 1-3, மறவர் செயல்: குறுந். 283:5-7, ஒப்பு.

     3. ஆறு செல்வம்பலர்: குறுந். 331:2, 350:6.

     3-4. வம்பலர்மேல் உவலிடு பதுக்கை: (குறுந். 77:3, ஒப்பு.); “செருவேட்டுச் சிலைக்குஞ் செங்க ணாடவர், வில்லிட வீழ்ந்தோர்பதுக்கை” (அகநா. 157:4-5.)

     5. நனந்தலை: குறுந். 272:3.

(297)
  
(தலைவன் மடலேறத் துணிந்ததைத் தோழி தலைவிக்கு உணர்த்தியது.)
 298.    
சேரி சேர மெல்ல வந்துவந் 
    
தரிது வாய்விட் டினிய கூறி 
    
வைக றோறு நிறம்பெயர்ந் துறையுமவன் 
    
பைத னோக்க நினையாய் தோழி 
5
இன்கடுங் கள்ளி னகுதை பின்றை 
    
வெண்கடைச் சிறுகோ லகவன் மகளிர் 
    
மடப்பிடிப் பரிசின் மானப் 
    
பிறிதொன்று குறித்ததவ னெடும்புற நிலையே. 

என்பது கிழத்திக்குத் தோழி குறைமறாமற் கூறியது.

பரணர்.

     (பி-ம்.) 4. ‘மைய னோக்க’; 5. ‘இன்கடுங் களிற்றின’், ‘னஃகுதை’,‘னகுதைதந்தை’; 7. ‘யானந’்; 8. ‘குறித்தவ’.

     (ப-ரை.) தோழி , சேரி சேர - நம்முடைய தெருவின்கண் அடைய, மெல்ல வந்து வந்து , அரிது வாய்விட்டு -அருமையின் வாய்திறந்து, இனிய கூறி - நம் சிந்தைக்குஇனியவற்றைக் கூறி, வைகல் தோறும் - நாள்தோறும்,நிறம் பெயர்ந்து உறையும் அவன் - தான் நினைத்ததொன்றுகைகூடாமையின் ஒளிமாறித் தங்குகின்ற அத்தலைவனது,பைதல் நோக்கம் - துன்பத்தைப் புலப்படுத்தும் பார்வையை, நினையாய் - நினைத்துக் காண்பாயாக; அவன் நெடுபுறம் நிலை - அவன் நீண்ட நேரம் இங்ஙனம் என் பின்நிற்றல், இன் கடு கள்ளின் - இனிய கடுமையையுடைய கள்ளையுடைய, அகுதை பின்றை - அகுதைக்குப் பின்நின்ற, வெள் கடை சிறு கோல் அகவல் மகளிர் - வெள்ளியமுனையையுடைய சிறிய கோலைக் கொண்ட அகவன்மகளிர் பெறும், மடம் பிடி பரிசில் மான - மடப்பம்பொருந்திய பிடியாகிய பரிசிலைப் போல, பிறிது ஒன்று