பக்கம் எண் :


548


     8. நெடும்புற நிலை: அகநா. 58:14, 220:11.

     புறநிலை: நற். 306:11.

(298)
  
(தலைவன் சிறைப்புறத்தே நிற்ப, தலைவி தன் தோள் மெலிவைத்தோழிக்குக் கூறுவாளாய் வரைதல் வேண்டு மென்பதை அவனுக்குப்புலப்படுத்தியது.)
 299.    
இதுமற் றெவனோ தோழி முதுநீர்ப் 
    
புணரி திளைக்கும் புள்ளிமிழ் கானல் 
    
இணரவிழ் புன்னை யெக்கர் நீழற் 
    
புணர்குறி வாய்த்த ஞான்றைக் கொண்கற் 
5
கண்டன மன்னெங் கண்ணே யவன்சொற் 
    
கேட்டன மன்னெஞ் செவியே மற்றவன் 
    
மணப்பின் மாணல மெய்தித் 
    
தணப்பின் ஞெகிழ்பவென் றடமென் றோளே. 

என்பது சிறைப்புறமாகத் தோழிக்குக் கிழத்தி உரைத்தது.

வெண்மணிப் பூதி.

    (பி-ம்.) 1. ‘இதுவுமற்’; 3. ‘இணர்வீழ்’; 5. ‘மன்னங்’; 8. ‘ஞெகிழ்பவென்றட’, ‘ஞெகிழ்பதட’.

     (ப-ரை.) தோழி--, முதுநீர் புணரி திளைக்கும் -நிலத்திற்குப் பழையதாகிய கடலின் அலை அளவளாவுகின்ற, புள் இமிழ் கானல் - பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச்சோலையிலுள்ள, இணர் அவிழ் புன்னை எக்கர் நீழல் -பூங்கொத்துக்கள் மலர்ந்த புன்னை வளர்ந்த மேட்டிலுள்ளநிழலில், புணர் குறி வாய்த்த ஞான்றை - புணர்குறியைப்பெற்ற காலத்தில், எம் கண் - எம் கண்கள், கொண்கன்கண்டன - தலைவனைப் பார்த்தன; எம் செவி - எம்முடையகாதுகள், அவன் சொல் கேட்டன - அவனுடைய சொற்களைக் கேட்டன; எம் தட மெல் தோள் - எமது பரந்தமெல்லிய தோள்கள், அவன் மணப்பின் - அவன் எம்மைமணந்தால், மாண் நலம் எய்தி - மாட்சிமைப்பட்ட அழகைப்பெற்று, தணப்பின் - அவன் பிரிந்தால், ஞெகிழ்ப -சோர்வன; இது எவன் - இஃது என்ன வியப்பு!

     (முடிபு) தோழி, எம் கண் கண்டன; செவிகேட்டன; தோள் மணப்பின்நலம் எய்தித் தணப்பின் ஞெகிழ்ப.

     (கருத்து) தலைவன் இடையிட்டு வருவதால் யான் வருந்துவேனாயினேன்.