மதுரைக் கண்டரதத்தன் (பி-ம். மதுரைக் கண்டாகததன்.) (பி-ம்.) 3. ‘தேம்பிய மாமலர்’.
(ப-ரை.) புரிமடம் மரையான் - விரும்புகின்ற மடப்பத்தையுடைய மரையானினது, கருநரை நல் ஏறு - கருமையையும் பெருமையையுமுடைய நல்ல ஆண், தீ புளிநெல்லி மாந்தி - இனிய புளிப்பையுடைய நெல்லிக்காயைத்தின்று, அயலது - அருகில் உள்ளதாகிய, தேம்பாய் மாமலர் - தேன் பரவிய அழகிய மலர்கள், நடுங்க வெய்து உயிர்த்து - நடுங்கும்படி வெப்பமாகிய மூச்சை விட்டு, ஓங்கு மலைபசு சுனை - உயர்ந்த மலையினிடத்துள்ள பசிய சுனைநீரை,பருகும் நாடன் - உண்ணுகின்ற நாட்டையுடைய தலைவன்,