தாயங்கண்ணன். (பி-ம்.) 3. ‘பொருந்திய’ 5. ‘மாழைப்’ 6. ‘நன்னிறஞ்’.
(ப-ரை.) தோழி--, மான் ஏறு - ஆண்மான்கள், மடம்பிணை தழீஇ - மடப்பம் பொருந்திய பெண்மான்களைத்தழுவி, மருள் கூர்ந்து - மயக்கம் மிக்கு, கானம் நண்ணிய - காட்டினிடத்துப் பொருந்திய, புதல் மறைந்து ஒடுங்கவும் - புதலின் கண்ணே மறைந்து ஒடுங்கியிருக்கும்படியும், கைஉடை நல்மா - துதிக்கையையுடைய நல்ல ஆண்யானைகள்,பிடியொடு பொருந்தி - பெண் யானைகளோடு சேர்ந்து,மை அணி மருங்கின் மலையகம் சேரவும் - மேகங்களைஅணிந்த பக்கத்தையுடைய மலையிடத்தை அடையும்