பக்கம் எண் :


582


படியும், மாரி மா மழை - கார்காலத்துக்குரிய பெரிய மழை,மாலை வந்தன்று - மாலைக்காலத்திலே வந்தது; பொன்நேர் மேனி - பொன்னையொத்த எனது மேனியின், நல் நலம்சிதைத்தோர் - நல்ல அழகைக் கெடுத்த தலைவர், இன்னும்வாரார் ஆயின்--, நம் இன்னுயிர் நிலை - நம்முடையஇனிய உயிர் நிலை, என் ஆம் - எத்தகையது ஆகும்?

     (முடிபு) தோழி, மானேறு ஒடுங்கவும், மா சேரவும், மழை வந்தன்று; சிதைத்தோர் வாராராயின் உயிர்நிலை என்னாம் ?

     (கருத்து) தலைவர் வாராவிடின் என் உயிர் நீங்கும்.

     (வி-ரை.) மழையை அஞ்சி மான் முதலிய விலங்குகள் தம் துணையோடு ஒடுங்கின. கையுடை நன்மா என்றலின் யானையாயிற்று. மழைகூறினமையின் கார்காலமாயிற்று.

     பொன் ஏர் மேனி- இப்பொழுது பசலை எழுகின்ற எனது மேனியெனலும் பொருந்தும்.

     தலைவன் மீண்டு வருவதாகக் கூறிச் சென்ற பருவம் வந்ததன்றிஅப்பருவத்தில் ஆண் விலங்குகள் பெண்விலங்குகளோடு ஒன்றுபட்டதும்தலைவியின் ஆற்றாமையை மிகுவிப்பதாயிற்று. ‘அவ்விலங்குகள்பெற்றபேறு யாம் பெற்றிலேமே!' என்று கவன்றாள்.

     மேற்கோளாட்சி 6. நேரென்பது உவம உருபாக வந்தது (நன். 366, மயிலை.)

     ஒப்புமைப் பகுதி 2. மானேறும் பிணையும்: குறுந். 256:2-3.

     பொன்னேர் மேனி: குறுந். 101:4, ஒப்பு; நற். 166:1-2.

     8. "என்னா வதுகொனம் மின்னுயிர் நிலையே" (ஐங். 228:4)

     இன்னுயிர்: குறுந். 216:7, 334:5, 349:7.

(319)
  
(தலைவன் சிறைப்புறத்தானாக, "ஊரினர் கூறும் அலர் பெரிதாயிற்று" என்று தோழிக்குக் கூறுவாளாய், விரைவில் வரைந்து கொள்ள வேண்டு மென்பதை அவனுக்குத் தலைவி புலப்படுத்தியது.)
  320.    
பெருங்கடற் பரதவர் கொண்மீ னுணங்கல்  
    
அருங்கழிக் கொண்ட விறவின் வாடலொடு  
    
நிலவுநிற வெண்மணல் புலவப் பலவுடன்  
    
எக்கர்தொறும் பரக்குந் துறைவனொ டொரு நாள்  
5
நக்கதோர் பழியு மிலமே போதவிழ்  
    
பொன்னிணர் மரீஇய புள்ளிமிழ் பொங்கர்ப்  
    
புன்னையஞ் சேரி யிவ்வூர்  
    
கொன்னலர் தூற்றுந்தன் கொடுமை யானே.  

என்பது அலரஞ்சி யாற்றாளாகிய தலைமகள், தலைவன் கேட்பானாகத்தோழிக்குக் கூறியது.