பக்கம் எண் :


584


     கழியில் இறாமீன் உண்மை: "தெண்கழிச் சேயிறாப் படூஉம்"(ஐங். 196:3.)

     1-2. மீனையும் இறாவையும் பரதவர் தொகுத்தல்: "இருங்கழிமுகந்த செங்கோ லவ்வலை, முடங்குபுற விறவோ டினமீன் செறிக்கும்"(அகநா. 220:16-7.)

     3. மணலுக்கு நிலவு: குறுந். 123:2, ஒப்பு.

     4-5. தலைவி தலைவனொடு நகுதல்: குறுந். 169:3, 226:7.

     7. புன்னையஞ் சேரி: (குறுந். 351: 6); புன்னையங் கொழு நிழன்முன்னுய்த்துப் பரப்பும், துறைநணி யிருந்த பாக்கமும்" (நற். 101:4-5.)

     6-7. புன்னைப் பூங்கொத்துக்குப் பொன்: "பொன்னிணர் நறுமலர்ப்புன்னை", "பொன்னென, நன்மலர் நறுவீ தாஅம், புன்னை நறும்பொழில்" (அகநா. 126:15, 360:17-9.)

     7-8. ஊரினரது கொடுமை: குறுந். 24:5-6.

(320)
  
(நொதுமலர் வரையப் புக்க காலத்தில், "நான் அறத்தொடு நிற்பேன்"என்று தலைவிக்குத் தோழி கூறியது.)
 321.    
மலைச்செஞ் சாந்தி னார மார்பினன்  
    
சுனைப்பூங் குவளைச் சுரும்பார் கண்ணியன்  
    
நடுநாள் வந்து நம்மனைப் பெயரும்  
    
மடவர லரிவைநின் மார்பம ரின்றுணை  
5
மன்ற மரையா விரிய வேறட்டுச்  
    
செங்க ணிரும்புலி குழுமு மதனால்  
    
மறைத்தற் காலையோ வன்றே  
    
திறப்பல் வாழிவேண் டன்னைநங் கதவே.  

என்பது தோழி, கிழத்திக்கு நொதுமலர் வரையுமிடத்து, "அறத்தொடுநிற்பேன்" என்றது.

(ஆசிரியர் பெயர் காணப்படவில்லை)

     (பி-ம்.) 1. ‘மலைச்சேரஞ் செஞ்சாந்தினார’, ‘மலைச்சேரஞ் செஞ்சாந்தின்’ 4. ‘மடமாவரிவை’ 8. ‘திறம்பல்’.

     (ப-ரை.) அன்னை--, மடவரல் அரிவை - மடப்பம்வருதலையுடைய அரிவையே, நின் மார்பு அமர் இன்துணை - நினது மார்பைப் பொருந்தும் இனிய தலைவன்,மலை செ சாந்தின் ஆரம் மார்பினன் - மலையில் உண்டாகியசெஞ்சந்தனத்தையும் முத்து மாலையையும் அணிந்த மார்பினனாகியும், சுனை பூ குவளை சுரும்பு ஆர் கண்ணியன் - சுனையில் மலர்ந்த குவளையினது வண்டுகள் நிறைந்த