(பி-ம்.) 2. ‘வொரீஇ’ 7. ‘யொல்லாங்கு’ (ப-ரை.) தோழி--, அமர் கண் ஆமான் அம்செவிகுழவி - மேவுதலையுடைய காட்டுப் பசுவின் அழகியகாதுகளையுடைய கன்று, கானவர் எடுப்ப வெரீஇ இனம்தீர்ந்து - வேட்டுவர் எழுப்புவதனால் அஞ்சித் தன் இனத்தினின்றும் பிரிந்து சென்று, கானம் நண்ணிய சிறுகுடிபட்டென - காட்டினிடத்துப் பொருந்திய சிறிய ஊரிலேஅகப்பட்டதாக, இளையர் ஓம்ப மரீஇ - இளைய மகளிர்பாதுகாப்பக் கலந்து, அவண் நயந்து - அவ்விடத்தைவிரும்பி, மனை உறை வாழ்க்கை வல்லியாங்கு - வீட்டின்கண் உறையும் வாழ்க்கையில் வன்மை பெற்றது போல,மருவின் - கலந்து பழகுதலைக் காட்டிலும், இனியவும்உளவோ - இனிய பொருள்களும் இருக்கின்றனவோ?ஆதலின் நாமும் தலைவரோடு மருவும் பொருட்டு, ஒல்வாங்கு நடந்து - இயன்ற அளவில் நடந்து, செல்வாம் - தலைவன் இருக்குமிடத்திற்குச் செல்வேம்.
(முடிபு) தோழி, ஆமான்குழவி எடுப்ப வெரீஇத் தீர்ந்து குடிப்பட்டென, ஓம்ப மரீஇ நயந்து வில்லியாங்கு, மருவின் இனியவும் உளவோ?நடந்து செல்வாம்.