புலப்படுத்தினான். அது கேட்ட பாகன் தேர் பண்ணி விரைவில் தலைவிபாற் சேர்த்தல் பயன்.
தலைவியோடு இன்புறாத நாட்களைப் பதடி வைகலெனத் தலைவன்கூறியதாக அமைத்த சிறப்பால் இச்செய்யுளின் ஆசிரியர், "பதடிவைகலார்" என்னும் பெயர் பெற்றார்.
ஒப்புமைப் பகுதி 2. படுமலைப்பாலை: புறநா. 135:7.
4-5. முல்லை நாறும் நுதல்: "நின், நன்னுத னாறு முல்லை மலர" (ஐங். 492:1-2) "முல்லை காலொடு மயங்கி, மையிருங் கான நாறுநறுநுதல்" (அகநா. 43:9-10.)
நுதல் மணத்தல்: குறுந். 22:5, ஒப்பு.
6. தலைவியின் தோளில் தலைவன் துஞ்சுதல்: "வேய்புரை மென்றோ ளின்றுயில்" (குறிஞ்சிப். 242); "வேயுறழ் மென்றோட் டுயில் பெறும்" (கலி. 104:24); "தோள்புலம் பகலத் துஞ்சி", "முருந்தேர் முறுவலிளையோள், பெருந்தோ ளின்றுயில் கைவிடு கலனே" (அகநா. 187:1,193:13-4); "தாம்வீழ்வார் மென்றோட் டுயிலி னினிதுகொல்" (குறள். 1103.)
(323)
(தலைவனிடம் தலைவி இற்செறிக்கப்படுவாளென் பதனைக் கூறியதோழியை நோக்கி, "யான் ஆண்டு வந்து இரவுக் குறியில் தலைவியைக்கண்டு செல்வேன்; அப்பால் வரைந்து கொள்வேன்" என்று தலைவன்கூற, அது கேட்ட தோழி, "நீ நின் அன்பின் மிகுதியால் வழியின் ஏதம்பாராது வருகின்றாய்; இவள் அதற்கு அஞ்சுவாள்" என்று கூறி வரைவுகடாயது.) 324. | கொடுங்கான் முதலைக் கோள்வ லேற்றை |
| வழிவழக் கறுக்குங் கானலம் பெருந்துறை |
| இனமீ னிருங்கழி நீந்தி நீநின் |
| நயனுடை மையின் வருதி யிவடன் |
5. | மடனுடை மையி னுயங்கும் யானது |
| கவைமக நஞ்சுண் டாஅங் |
| கஞ்சுவல் பெருமவென் னெஞ்சத் தானே. |
என்பது செறிப்பறிவுறுக்கப்பட்டு, "இராவாரா வரைவல்" என்றாற்கு
(பி-ம். என்றார்க்கு)த் தோழி அது மறுத்து வரைவு கடாயது.
(செறிப்பறிவு.... என்றாற்கு - தலைவி இற்செறிக்கப் படுவாளென்பதைத் தோழியால் உணர்த்தப் பெற்று, இரவுக்குறி வந்து தலைவியோடு அளவளாவி அப்பால் வரைந்து கொள்வேனென்ற தலைமகனுக்கு)
கவைமகன். (பி-ம்.) 1. ‘கொடுந்தாண்’ 5. ‘னுயக்கும்’. (ப-ரை.) பெரும - தலைவ, நீ நின் நயன் உடைமையின் - நீ நினது அன்புடைமையால், கொடு கால் முதலை